Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "Health"

மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?

, , ,

மன அழுத்தம் பல உடல் நோய்களைப் போல் ஒரு நோயே. ஆகையால் உடல் நோய்க்கு எவ்வாறு மருத்துவம் தேவையோ அதேபோல் மன அழுத்தத்திற்கும் தேவை. நமக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தம் தானா என முதலில் தெரிந்து கொள்ளுவது அவசியம்.

மன அழுத்தம் எனில் என்ன?

மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய சூழ்நிலை அல்லது மனிதர்களுக்கு ஈடு கொடுக்கவேண்டிய நிலையில் உள்ள நாம், நம்மால் இனியும் ஈடுகொடுக்க முடியாது என்ற நிலை வரும்போது வெளிப்படுத்தும் பல அறிகுறிகள் தான் மனஅழுத்தம் எனப்படுகின்றது. அதாவது நாம் நம்முடைய உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓர் இறுக்கமான நிலைக்கு வந்து விடுகிறோம். இதைத்தான் மன அழுத்தம் என்கின்றனர் உளவியலர்.

மன அழுத்தத்தின் காரணிகள்

1. சுற்றுச் சூழல்:

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய சுற்றுச்சூழல் நம்மிடம் நிறைய, மிக நிறைய எதிர்பார்க்கிறது. சூழலைச் சகித்துக் கொள்ள வேண்டும்... யாரிடமும் என்ன முறையிட்டும் பயனில்லை என்ற நிலை. நம்முடைய அரசும் சமூகமும் செயலற்று இருக்கும் நிலையே எங்கும் காணப்படுகிறது. எப்படியேனும் பொருளாதார ரீதியில், அந்தஸ்து ரீதியில், பதவி ரீதியில் பெரும் வெற்றிகளைக் குவித்துவிட வேண்டும் என்கிற கூட்டம் அதிகமாக சுற்றுச் சூழலையும் தனிமனித வாழ்வினையும் பெரிதும் பாதிக்கிறது. அரசாங்கங்கள் உண்மையாய் நடந்து கொள்வது என்பது காணக் கிடைக்காத ஒன்று ஆகிவிட்டது.

சமீபத்தில் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது – தகவல் அறியும் சட்டம். சிறிது நாட்கள் மக்களுக்குப் பலனும் அளித்தது. ஆனால் அரசாங்க அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் பலவித சங்கடங்கள். பார்த்தது அரசு! கொண்டு வந்தது ஒரு சட்டத் திருத்தம்: அரசின் இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கோரக்கூடாது. இப்போது எதைக் கேட்டாலும் இந்த விதியைக் காட்டி தகவல் தர இயலாது என உடனடிப் பதில் வருகிறது. ஒரு படிவம் தயாரித்து வைத்துக் கொள்ளாததுதான் குறை. செயலற்ற அரசுகள், மோசமான வானிலை, விழி பிதுங்கும் சாலைகள், இரைச்சல், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகக் கொழிக்கும் எல்லா வகையான அசுத்தங்கள். இவற்றிக்கிடையே மனிதர்கள் இந்த அளவுக்கு மன நலத்தோடு இருப்பது அதிசியமே எனலாம்.

2. வாழ்க்கைச் சிக்கல்கள்:

o பொருளாதாரச் சிக்கல்கள்,
o பாடசாலைக் கட்டணம் கட்டக் கடைசி நாள்,
o வேலையை முடிக்கக் கடைசி நாள்,
o நேர்முகம் நன்றாக நடக்கவேண்டுமே கடவுளே…
o இன்றைக்கு என்னுடைய தருகை நன்றாக நடக்கவேண்டுமே…
o என்னுடைய நண்பனோடு, மனவியோடு ஏற்பட்ட பிணக்கு எவ்வாறேனும் தீர வேண்டுமே…
o இன்று டீசல் வாங்குவதற்குக் காசு இல்லையே…
o ஒரு நாளில் எத்தனை எத்தனை வேலைகள் செய்வேன்...
o யாரிடம் சொல்லி அழுவேன்...
o வாழ்வின் சிக்கல்கள் அடிமுட்டளைக் கூட பெரும் வேதாந்தி ஆக்கி விடும்.

3. உடம்பு:

o இளம் சிறார்க்கு உடம்பில் வேகமாக ஏற்படும் வளர்ச்சி,
o மகளீருக்கு மாதவிடாய் நிற்கும் வேளையில் ஏற்படும் அவதி,
o வித விதமான நோய்கள், காயங்கள், மூப்பு
o உடற்பயிற்சி இன்மை,
o சத்துக் குறைந்த உணவு,
o தேவையான அளவு உறக்கம் இன்மை,
o உடம்பு துன்பங்களின் கொள்கலன் என்றால் மிகையாகாது.

4. எண்ணங்கள்:

o நம்முடைய மூளை நம்மைச் சுற்றி நடப்பனவற்றை எவ்வாறு புரிந்துகொள்ளுகிறது
o ஏனெனில் ஒரு காரணி தாக்கும்போது மூளை எடுக்கும் முடிவு அது அக்காரணியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது.
o பயன்தரும் முடிவு மனஅழுத்தத்தை இல்லாமலேயே செய்தல் கூடும்
o அல்லது பெரும் அளவு குறைக்கவாவது செய்யும்.

மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்:

உடல்:

* மிக அதிகமான மனஅழுத்தம் தொடரும் நிலையில் ஜீரண உறுப்புகள் பாதிப்பு, நரம்பு மண்டலங்கள் பாதிப்பு
* குடல் அழற்சி, என்ன வைத்தியம் செய்தாலும் சரியாகாத, தலைவலி, ஏன் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

உள்ளம்:

* வாழ்வில் உற்சாகம் இன்மை,
* முற்றிலும் எரிந்து முடிந்த கரித்துண்டு போல் உளசக்தி இல்லாமல் சோர்வடைதல்,
* பணியில் உற்சாகம் இன்மை,
* டிப்ரஸன் எனப்படும் மனவீழ்ச்சி.

மன அழுத்தம் எல்லோருக்கும் ஏற்படுமா ?

பொதுவாகக் கூறவேண்டுமெனில் எல்லோருக்கும் ஏற்படும் என்றே கூற வேண்டும். ஆனால் விதிவிலக்காக சிலபேர் இருக்கக் கூடும். சரித்திர நாயகர்களின் வரிசையும் நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் சிலரைப் பற்றிய நினைவும் நிழலாடுகிறதா?

எதிர் கொள்ளும் திறன்

பாதகமான நிகழ்வுகளை எதிர்கொள்ளும் திறன் நம் எல்லோருக்கும் உண்டு. பெரும் அளவுக்கு பாதகமான நிகழ்வுகளுக்கு இடையேயும் மன அழுத்தத்தில் விழாமல் நம்மைக் காப்பது இத்திறன் தான். அதாவது மன அழுத்தத்திற்கான காரணங்கள் இருந்த போதிலும் நாம் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதால் மனஅழுத்தம் ஏற்படுவது இல்லை.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாதவர் என்றார் வள்ளுவர்.

ஆனால் அளவுக்கு அதிகமான பிரச்சினைகள், எதிர்ப்புத் திறனையும் மீறிய சூழல் ஒருவருக்கு ஏற்படும்போது அவர் மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகிறார். அப்படிப்பட்ட சமயத்தில் அவருடைய உற்றார்,உறவினர், சமுதாயம் அல்லது அரசாங்கம் உதவினால் அவர் உள நலம் மீளப்பெற்று இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.

எதிர்கொள்ளும் திறனும் நம்முடைய சிந்தனைப் போக்கும்

பலர் எளிய பிரச்சனைகளிலேயே துவண்டு விடுகிறார்களே இது ஏன்? நம்மில் பலர் பிரச்சனைகள் எதிர்கொள்ளும் அளவுக்கு இருக்கும் போதே மன அழுத்தத்தில் வீழ்ந்து விடுகிறோமே இது ஏன்?

பார்வைகள்

பிரச்சனைகளை மனிதர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? இந்தப் பார்வையில் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள். பிரச்சனையை வாய்ப்பாக மாற்றிக் கொள்கிறார்கள் சிலர். பிரச்சனையினால் அடித்துச் செல்லப்படுகிறார்கள் பலர். இது ஏன்? பிரச்சனையைப் பார்க்கும் பார்வையில் உள்ள வேறுபாடுதான் காரணம் என்கின்றனர் உளவியலர். இந்தப் பார்வை வேறுபாட்டினால், சிந்தனைப் போக்கால், மனிதர்கள் பொருத்தமான எதிர்கொள்ளும் வழி, பொருத்தமற்ற எதிர்கொள்ளும் வழி என வெவ்வேறு வழிகளில் பயணித்து விடுகின்றனர்.

பார்வைகளில் சிந்தனைகளில் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

ஆல்பர்ட் எல்லிஸ் என்ற உலகப்புகழ் பெற்ற உளவியல் அறிஞர் மூன்று முக்கியமான வகைக் குறைபாடுகள் நம்முடைய சிந்தனையிலும், நம்பிக்கையிலும் பார்வையிலும் உள்ளதால் நாம் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளும் வழிகளில் குறைபாடுகள் ஏற்படுகின்றன என்கிறார்.

மூன்று முக்கியமான குறைபாடுகள எவை?

உதாரணமாக ஒருவருடைய மனைவியிடம் அவர் ஒரு குவளை நீர் தருமாறு ஹாலில் அமர்ந்து கொண்டு கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். காட்சிகள் மூன்று:

* மனைவி நான் வேலையாய் இருக்கிறேன் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கூற கணவன் மறுமொழி கூறாமல் ஆனால் ஏதோ முனகிக்கொண்டு சென்று தானே எடுத்துக்கொள்வது ஒரு காட்சி.
* நீ எப்படி அவ்வாறு கூறலாயிற்று என்று சினம் கொள்வது ஒரு காட்சி,
* இந்த வீட்டில் எனக்கு எந்த மரியாதையும் கிடையாது எல்லாம் என் தலைவிதி என்பது மூன்றாவது காட்சி.

முதல் காட்சியில் கணவன் தன்னுடைய உத்தரவிற்கு மனைவி உடன் படாதபோது தண்ணீரைத் தானே எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் மனதில் ஓடும் சிந்தனை: நாம் எதிர் பார்த்தது நடக்கவில்லை. வருத்தத்திற்கு உரியதுதான் ஆனாலும் மாற்று வழியைப் பார்ப்போம். இப்படிப்பட்ட சிந்தனை பொருத்தமான எதிர்கொள்ளும் வழியாகும். இதன் அடிப்படையில் உள்ள சிந்தனை என்ன? மற்றவர்கள் நாம் விரும்பியவாறு நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். பல வேளைகளில் அவ்வாறு நடப்பதில்லை. இது உலக இயற்கை, ஆகையினால் ஏற்றுக்கொள்வோம்.

இரண்டாவது காட்சியில் கணவனுடைய மனதில் தன்னுடய மனைவி தான் சொன்னதை எவ்வாறு மறுதலிக்கப் போனாள்? ஒரு போதும் இவளுடைய செயலை ஏற்றுக் கொள்ள மாட்டேன். இவளுடைய செயல் மிகவும் கீழ்மைப்படுத்த வேண்டியது, கண்டிக்கத்தக்கது என்ற சிந்தனை தோன்றுவதால் சினம் கொள்கிறார். இங்கு அடிப்படை சிந்தனை: மற்றவர்கள் அதிலும் குறிப்பாக மனைவி நாம் விரும்பியவாறு நடந்தே தீர வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளவில்லையெனில் அவர் நிந்திக்கப்பட வேண்டியவர். கிழ்மைப்படுத்தப்பட வேண்டியவர் (She deserved to be condemned).

மூன்றாவது காட்சியில் கணவன் மனைவியை விடுத்து தன்னை நொந்து கொள்கிறார். இங்கு அடிப்படைச் சிந்தனை: தான் சரி இல்லை அதனால் தான் இவ்வாறு நடக்கிறது. ஆகையினால் தான் கிழ்மைப்படுத்தபட வேண்டியவர் (I deserve to be condemned).

இனி வேறு ஒரு உதாரணம். ஒருவர் வேலைக்கு நேர்முகம் தருகிறார். மிக நன்றாகச் செய்கிறார். நிச்சயமாகத் தனக்கு அவ்வேலை கிடைக்கும் என எண்ணி இருக்கும்போது இடிபோல ஒரு செய்தி. அவரை விட எல்லா விதத்திலும் குறைந்த தகுதியுடைய அவருடைய நண்பரொருவருக்கு அந்த வேலை கிடைத்து விட்டது. இதை ஒருபோதும் ஏற்கமாட்டேன், இந்த உலகத்தையே ஒழித்து விடவேண்டும் என்று கொதித்து எழுகிறார் அவர். இங்கு அடிப்படைச் சிந்தனை: உலகமும், சமூகமும் தான் எதிர்பார்ப்பதற்கு இணங்க நடந்து கொள்ளவேண்டும் இல்லையேல் உலகமும் சமூகமும் கீழ்மைப்படுத்தப்பட வேண்டும்.(world condemnation)

மன அழுத்தம் இந்த மூன்று வகையான கீழ்மைப்படுத்தலின் (self condemnation, other condemnation, world condemnation) விழைவாக எற்படுகிறது என்கிறார் எல்லிஸ்.

ஏன் மனிதர்கள் தங்களுடைய சிந்தனையில் இவ்வாறு மாறுபடுகிறார்கள்?

மூன்று உலக நடைமுறைக்கு (நிதர்சனம்) மாறான,பார்வைகள் ( மூட நம்பிக்கைகள்), தான் இதற்குக் காரணம்.

அவைகள்:

o பூதாகரப்படுத்துதல் (“awfulize”)
o முடிவான, மாறுதலுக்கு உற்படுத்தக் கூடாத நிலைப் பாடு(“absolutize")
o இதை ஒரு போதும் தாங்க என்னால் இயலாது (I can not stand this)

1.பூதாகரப்படுத்துதல் (“awfulize”):

இந்தப் பார்வையினால் நாம் நம்முடைய அனுபவங்களைத் தேவைக்கு அதிகமாகப் பெரிதுபடுத்தி விடுகிறோம். நன்றாக நேர்முகம் தந்த வேலை கிடைக்காது போவது மிகவும் கவலை தருவதுதான். அதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் அதோடு உலகமே முடிந்து போவது போல அந்நிகழ்வினைப் பார்த்தால் எப்படி? நம்முடைய பார்வைதான் நம்முடைய நிஜம். உலகமே முடிந்து போனது போல் பார்த்தால் பிறகு மனஅழுத்தம் வரத்தானே செய்யும். பல சமயங்களில் நம்மில் பலருக்கு நாம் விரும்பியபடி வாழ்க்கை அமையாமல் போகலாம். நமக்குக் கிடைத்த வாழ்வினை மிகமிகத் துச்சமாகவும் கிடைக்காததை மிகமிக உயர்வானதாகவும் பூதாகாரப்படுத்திப் பார்க்கும் பார்வையுடன் சுய கீழ்மைப்படுத்துதலும் சேர்ந்து கொண்டால் மன அழுத்தத்துடன் மனவீழ்ச்சியும் சேர்ந்து வரும்.

2. முடிவான, மாறுதலுக்கு உற்படுத்தக் கூடாத நிலைப் பாடு(“absolutize’):

சற்று சிந்தித்துப் பார்த்தால் நம்மில் பலர் எதையும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஆணி அடித்தாற் போல் இருப்பதை உணரலாம். ‘should,” “must,” “ought,” “always,” and ‘never,” என்ற சொற்கள் இவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வருவன. தான் அல்லது மற்றவர்கள் அந்த நிலைப்பாட்டிலிருந்து எள்ளளவும் மாறக்கூடாது, மாறினால் அவர்கள் மோசமானவர்கள் என்கிற பார்வை((“absolutize”) யுடன் மற்றவரைக் கீழ்மைப்படுத்துதலும் சேர்ந்து கொண்டால் மன அழுத்தத்திற்குக் குறைவே இல்லை.

3. இதை ஒரு போதும் தாங்க இயலாது(I can’t stand this):

நாம் பல சமயங்களில் கடவுளைப் போல் நடந்து கொள்கிறோம். வாழ்க்கை ரோஜா மலர்ப் படுக்கை இல்லை என்பதைக் கிளிப்பிள்ளை போல சொல்லும் நாம் வாழ்க்கை அவ்வாறு இருந்தே ஆகவேண்டும் என்று அடம் பிடிக்கிறோம். கடவுள் ஒருவருக்குத்தான் தான் விரும்பிய படி வாழ்வது சாத்தியம். மனிதர்க்குச் சாத்தியமே இல்லை. என்னால் அவருடன் வேலை பார்க்க முடியாது. என்னால் அவருடன் வாழ முடியாது. என்னால் இந்த உணவைச் சாப்பிட முடியாது எத்தனை எத்தனை முடியாதுகள்!!!

உண்மையில் நாம் முடிவு செய்து விடுகிறோம் இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று. பிறகு கூறுகிறோம் என்னால் இயலாது என. இந்தப் பார்வை மற்றும் உலகத்தைக் கீழ்மைப்படுத்தும் எண்ணங்கள் ஒன்று சேர்ந்தால் மன அழுத்தம் நிச்சயம்.

பகுத்தறிவூட்டப்பட்ட உணர்ச்சிகள், செயல்கள் தெரப்பி (Rational Emotive Behavioural therapy):

தெரப்பி:

எந்த ஒரு நிகழ்வு நிகழும் போதும் நாம் (1) நம்மை நாமே கீழ்மைப்படுத்திக் கொள்ளுதல், (2) பிறரைக் கீழ்மைப்படுத்துதல் (3) உலகத்தை அல்லது சமூகத்தைக் கிழ்மைப்படுத்துதல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றினையோ அல்லது அவற்றின் கலவையையோ பயன்படுத்தக் கூடும்.

இந்த அணுகுமுறை மூன்று வகையான உளப்பாங்கினால், (பூதாகரப் படுத்துதல், என்னுடைய நிலை மாற்றத்திற்கு உட்படுத்தக் கூடாதது, என்னால் இதைத் தங்கிக்கொள்ள இயலவே இயலாது ) மிகவும் பலப்படுத்தப் படுவதால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

ABCDE Format

A நாம் எதிர்கொள்ளும் ஒரு சூழ்நிலை உதாரணம்: மனைவி நீர் கொண்டுவந்து தர மறுத்தமை

B இந்தச் சுழலைப் பற்றிய நமது எண்ணம். உதாரணம்: என் மனைவியின் செயல் செய்யத்தக்கது அன்று + பூதாகாரப்படுத்துதல்

C மன அழுத்தம் அல்லது சினம், பிற உணர்வுகள்

D இச்சிந்தனையும் பார்வையும் பகுத்தறிவின் பாற்பட்டதா? தர்க்க ரீதியாக, அல்லது நடைமுறையில் உலகத்தில் காணப்படுகிறதா? எல்லாப் பெண்களும் தவறாது கணவன் கேட்கும் போது நீர் கொண்டுவந்து தருகின்றனரா? நம்முடைய நம்பிக்கைக்கு என்ன ஆதாரம்? இப்படிக் கேள்விகளைக் கேட்டோமேயானால் ஒவ்வொரு கேள்விக்கும் இல்லை….இல்லை எனப் பதில் வருவதை உணரலாம்.

E கேள்விகளை அவசர அவசரமாக புறந்தள்ளி விடாமல், தான் நினைப்பதுவும் தன்னுடைய பார்வையும் சரியானதுதான் என்று அடம் பிடிக்காது, உண்மைத்தேடல் செய்யும் பட்சத்தில் நமக்கு உபயோகமான சிந்தனை பிறக்கும். இதைத் தொடர்ந்து மனஅழுத்தம் விலகும்.

ஒன்றைக் கவனித்து இருப்பீர்கள். சூழல் காரணமாகத்தான் நமக்கு மன அழுத்தத்தின் ஆரம்பம் ஏற்படுகிறது என்றாலும் அவ்வழுத்தம் ஒரு நோய் என்கிற அளவுக்குப் பல்கிப் பெருகுவது நம்முடைய எண்ணங்களினாலும், பார்வைகளினாலும் தான் என்பதை. ஆகவே நாம் நம்முடைய சிந்தனைகளை, நம்பிக்கைகளை, மனப் பார்வைகளை பகுத்தறிவுக்கு உட்படுத்துவோம். அப்படிச் செய்யும்போது மிக அதிகமாக நம்மைப் பாதிக்கக்கூடிய அளவுக்குச் சென்று நம்முடைய எஜமானர்களாகிவிடும் உணர்ச்சிகளை நமக்கு அடங்கி, நலம் புரியும் நண்பர்களாக, பணியாளர்களாக மாற்றுதல் இயலும்.

தியானம்-

, , ,

தியானம்

ஓங்காரம்

இருளில் இருந்து பிரகாசத்திற்கு உயர்த்துவதின் அடையாளக் குறிப்பாகவே
ஓங்காரத்தைக் கருதி வந்தனர்.இந்துமதம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மதத்தின் ஆதாரப் பிரும்மத்தின் தெளிவின் கண்ணோட்டமான உருவம் இது ஆகும்.ஓங்காரத்தினை உச்சரிக்கும் போதே அந்தச் சின்னம் மனதில் உதிக்கும்.

�அ-உ-ம என்ற மூன்ற எழுத்துக்களின் சேர்க்கையே ஓங்காரம் ஆகும்.சகல விதமான வேத ஆகமங்களும், உபநிசச்துக்களும், சித்புருசர்களின் ஞான நூற்களிலும் இந்த பிரணவ மந்திரத்தைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசப் படுகிறது.பதஞ்சலி மஹாமுனிவர் தனது நூற்களில் ஓங்கார ஜெபமும் தியானமும் செய்யும் ஒரு நபருக்கு சமாதி நிலையை அடைய இயலும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஓன்றும் இல்லாத பரவெளியாகிய வெட்ட வெளியில் முதலில் உதித்தது �இம்�என்ற மவுன மொழியாகும்.இதையே சித்தர்கள் தமது நூற்களில் சொல்லற சும்மா இரு என்று சொல்லப் பட்டுள்ளது.

சப்தம் பிறந்த இடத்தில் சகல கலையும் உதிக்கும் என்பது முது மொழி ஆகும்.
.திரி மூர்த்திகளில் 1.பிரம்மா தனது பத்தினியாகிய சரஸ்வதியின் வீணையின் நாதத்தில் இருந்து ஒலிக்கும் பிரணவ மந்திர சப்தாட்சரத்தின் ஒலியோடு இயைந்து பரப் பிரம்மத்தை நோக்கித் தவம் இருத்தலையும்�� அடுத்ததாக 2.மஹாவி~;ணுவானவர் அநந்த சயனத்தில் இருந்த வண்ணம் பிரணவ சப்தத்தனை கேட்டு பரப் பிரம்மத்தை நோக்கி இருத்தலையும், பின்னர் 3.சிவன் தமது உடுக்கையின் பிரணவ சப்தத் தொனியில் மனோலயப்பட்டு பரப்பிரும்மத்தை நோக்கித் தவம் இருத்தலையும் சித்திர வடிவில் நாம் கண் கூடாகக் காண முடிகிறது.

எனவே முறையாக ஜெபம் செய்கின்ற ஓம் என்ற மந்திர வழிபாட்டின் மூலம்
அ~;டமா சித்துக்களாகிய அணிமா, மஹிமாஈ லஹிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், வசித்துவம், ஈசத்துவம் என்ற சித்துக்களை அடைந்து முடிவில் பிறவா முத்தி சித்தித்து
வீடு பேற்றினை அடையலாம்.

நரம்பு தளர்ச்சி நீங்க......

, , ,

நரம்பு தளர்ச்சி நீங்க
சித்த மருத்துவம்.

1.வல்வாரைக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி நீங்குவதடன் மன தைரியமும் ஆண்மையும் பெருகும்.

2.செம்பருத்திப் பூவைப்: பொடி செய்து அத்துடன் தேன் அல்லது தண்ணீருடன் சேர்த்துக்
கலந்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்குவதுடன் இதய சம்பந்தமான நோய்களும் தீரும்.

3.எலும்பிச்சம் பழச் சாற்றுடன் சிறிது திப்பிலி சர்க்கரை இவற்றைச் சேர்த்து அரைத்து அளவாய் உண்டு வர நரம்பு தளர்ச்சி தீரும்.

4.வல்லாரை�� தூதுவளை ஆகியவை சம எடை எடுத்து உலர்த்திப் பொடித்து பசுவின்
மோரில் கலந்து குடித்து வர நரம்பு தர்ச்சி தீரும்.

5.வெடிக்காத தென்னம் பாளையில் உள்ள பிஞ்சுடன் பசுவின் பாலைச் சேர்த்து நன்றாக அரைத்து சிறிதளவு அருந்தி வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

6.மாதுளம் பழச் சாற்றுடன் Nசுத்தமான தேன் சேர்த்த உண்டு வர நரம்பு தளர்ச்சி தீரும்.
நரம்பு தளர்ச்சி தீர லேகியம்.

சுக்கு,மிளகு,திப்பிலிகோ~;டம்,அதிமதுரம்,ஜீரகம்,ஏலம்,வால்மிளகு,கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி இவைகள் வகைக்கு 10கிராம் வீதம் எடுத்து இள வருப்பாக வறுத்து சூரணம் செய்து வைக்கவும்.

700கிராம் சீனா கற்கண்டை 700 மில்லி பசுவின் பாலில் போட்டு பாகு செய்து வைத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட இரண்டு சூரணங்களையும் பாகில் தூவிக் கிண்டி பின் நெய்
175கிராம் விட்டு நன்றாகக் கிளறிக் கொடுத்து கீழே இறக்கி வைத்து சத்தமான தேன் 175 கிராம் விட்டுக் கிண்டி ஜாடியில் பத்திரப் படுத்தவும்.இதில் வேளைக்கு நெல்லிக்காய் அளவு காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு வயிறு மந்தம்,அஜீரணம் இவைகளும் நீங்கும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........

, , , ...

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ...

* பிசிஜி - பிறப்பின் போது
* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது
* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்
* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்
* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்
* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்
* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்
* சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்
* எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்
* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்
* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்
* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்
* டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்
* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்
* ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்
* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆண்டுகள்
* வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்
* வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்
* டெட்டானஸ் - 10 ஆண்டுகள்
* சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
* டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்
* டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்

அஜீரணக் கோளாறுக்கு 'எலுமிச்சை' வைத்தியம்

, ,

துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்களில் பெரும்பாலானோருக்கும் ஏற்படுவது சகஜமாகவே இருக்கிறது.

இத்தகைய கோளாறு உள்ளவர்கள், எளிய முறையிலான வீட்டு வைத்திய முறையைக் கையாண்டாலே, எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி பயனடைலாம்.

ஓர் எலுமிச்சம் பழத்தை ஒரு டம்ளர் வெந்நீரில் பிழிந்துவிட வேண்டும். இதை, உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும். இப்படித் தவறாமல் செய்தால், அஜீரணக் கொளாறு ஏற்படாமல் தவிர்த்துவிடலாம்.

ஏற்கெனவே அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், உணவு உண்ட பிறகு சில நிமிடங்கள் கழித்து மேற்குறிப்பிட்ட கலவையை அருந்தினாலும் பலனளிக்கும்.

கர்ப்பிணிகளின் சரும பராமரிப்புக்கு...

, , ,

பொதுவாகவே கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு சருமம் வறண்டு காணப்படும். சிலருக்கு செதில்களும் உருவாகலாம். இவை அனைத்தும் சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடியவையே.

எனினும், கர்ப்பிணிகள் தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சில பொதுவான டிப்ஸ்கள் இவை:

* வழக்கத்தை விட கூடுதலாக ஓய்வு எடுக்கவும்.

* இயன்ற அளவு சூரியஒளியில் இருப்பதை தவிர்க்கவும்.

* மிகவும் மென்மையான சோப்களை பயன்படுத்தி அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும்.

* அடிக்கடி உடம்பை ஈரத்துணியால் சுத்தப்படுத்திக்கொள்ளலாம்.

* முகத்தில் மிதமான ஆயில் மஜாஜ் செய்யலாம். இது முகத்தை பளபளப்பாக்குவதோடு, ரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

* அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் சேரும் கழிவுகளை அகற்றும்.

* முடிந்த வரை மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிகொள்ளுங்கள். காரணம், அளவுக்கு அதிகமான கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகள், சருமத்தை பாதிக்கும் மிக முக்கிய காரணிகளாகும்.

குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு !

, , , ...

நமது நாட்டில் மருத்துவ சிகிச்சைகள் குறித்த குறைந்த பட்ச அறிவும், மருந்துகளின் பயன்பாடுகள் குறித்த போதுமான விழிப்புணர்வும் பெரும்பாலானோருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலை நாடுகளில் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் பெரும்பாலான மருந்துகள் வினியோகிக்கப்படுவதில்லை. அந்த விதிமுறையை அங்குள்ள அனைத்து மருந்தகங்களும் தவறாமல் கடைபிடிக்கின்றன.

ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. மருத்துவ சோதனை செய்யாமல் மருந்து கடைகளில் சென்று நோயைச் சொல்லி மருந்து வாங்கிச் செல்வது நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண நிகழ்ச்சி.

இத்தகைய பழக்கம் பல வேளைகளில் பெரும் சிக்கல்களில் நம்மைக் கொண்டு போய் விட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான பரிசோதனையின்றி மருந்துகள் வழங்குவது அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடுகிறது.

மருத்துவரிடம் குழந்தைகளைக் கொண்டு செல்லும் போது நிதானமாகவும், கவனமாகவும் நமது சந்தேகங்களைக் கேட்க வேண்டும்.

சுமார் ஐம்பது விழுக்காடு பெற்றோர் ஏதேனும் ஒரு சந்தேகத்துடன் தான் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வருகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.

மருத்துவரிடம் மீண்டும் ஒரு முறை நமது சந்தேகத்தைக் கேட்பது நமது தரத்தைக் குறைக்குமென்றோ, மருத்துவரை சிரமப்படுத்துவதும் என்றோ நினைப்பது குழந்தைகளின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.

கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பது அனைவருக்கும் பயன் தரும்.

1. முதலில் மருந்தின் “கடைசி நாள்“ என்ன என்பதைக் கவனியுங்கள். கடைசி நாள் எட்டப்பட்டிருந்தாலோ, தாண்டியிருந்தாலோ அந்த மருந்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். அது எத்தனை விலையுயர்ந்ததாய் இருந்தாலும்.

2. மருந்து எத்தனை முறை அளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை எனில் ஒரு நாள் ஆறு முறை அளிக்கவேண்டும் என நினைவில் கொள்ளுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக அதிக தடவைகள் கொடுப்பது தவறு.

3. எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அந்த அளவு மட்டும் கொடுங்கள். அதிக அளவில் மருந்து கொடுப்பது நோயை எந்த விதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக குழந்தைகளுக்கு இன்னல்களை உருவாக்கி விடக் கூடும். எனவே சரியான அளவு மருந்து மட்டுமே அளிக்க வேண்டும்.

சில மருந்துகள் 100 எம்.ஜி, 200 எம்.ஜி என பல வகைகள் உண்டு. மருந்தின் பெயரோடு சேர்த்து அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவர் காய்ச்சலுக்காக ஐந்து நாள் ஆண்டிபயாடிக் கொடுத்தால், குழந்தையின் நோய் குறைந்து விட்டது என்பதற்காக மூன்றாவது நாளே நிறுத்தக் கூடாது. இது குழந்தைக்கு மீண்டும் அந்த நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

5. பழைய மருந்து வீட்டில் இருந்தால் அதைப் பயன்படுத்தும் முன் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் துவங்கிய சிறிது நாட்களில் வீரியம் இழந்து போகும். எனவே மருத்துவரிடம் அதுபற்றி உரையாடுதல் அவசியம்.

6. மருந்து உட்கொண்டதும் குழந்தையின் உடல்நிலையில் ஏதேனும் பிழை இருப்பது போல உணர்ந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். குழந்தைக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதையும் மருத்துவரிடம் முன்னமே தெரியப்படுத்த வேண்டும்.
முக்கியமாக பெரியவர்களுக்காய் வாங்கிய மருந்துகளை அதே போன்ற நோய் என்பதற்காய் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது.

7. மருத்துவர் நோய்க்கான மருந்துகளை எழுதித் தரும் போது எந்தெந்த மருந்து எதற்குரியது என்பதை கவனமாகக் கேளுங்கள். பின் மருந்து கடைகளில் அதை வாங்கும் போது அங்கும் அதே கேள்வியைக் கேளுங்கள். மருத்துவரின் பதிலும், மருந்து கொடுப்பவரின் பதிலும் ஒத்திருக்க வேண்டும்.

மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் மருந்தை பழச்சாறு, ஐஸ்கிரீம் போன்றவற்றுடன் கலந்து அளிக்கக் கூடாது.

8. மருத்துவர் உங்கள் குழந்தைகளைக் குறித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைப்பதில் நியாயம் இல்லை. நாமே பழைய மருந்து சீட்டுகள், குறிப்புகள், வேறு மருத்துவரிடம் சென்றிருந்தால் அந்த தகவல்கள் போன்றவற்றைத் தயாராய் வைத்திருக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற ஒரு நோய்க்காக இன்னொரு குழந்தைக்கு வழங்கக் கூடாது. நோயின் அறிகுறிகள் ஒன்றாய் இருந்தாலும் உண்மையில் வேறு நோயாய் இருக்கலாம். மருத்துவரை அணுகாமல் ஒருவருக்கு தரப்பட்ட மருந்தை இன்னொருவருக்காய் பயன்படுத்தக் கூடாது.

9. மருத்துவரிடம் மருந்தின் பெயர், எத்தனை முறை வழங்க வேண்டும், எத்தனை நாள் கொடுக்க வேண்டும், உணவுடன் கொடுக்கலாமா, ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா, மருந்து வேலை செய்கிறது, நலமடையத் துவங்கியதும் மருந்தை நிறுத்தலாமா என அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

10. வேறு ஏதாவது மருந்தை குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறீர்கள் எனில் அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

சிறு சிறு நோய்கள் வரும்போதெல்லாம் பெரும்பாலும் பெற்றோரே மருத்துவராய் மாறி குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி விடுகின்றனர். அதற்குக் காரணம் அலட்சியமாகவோ, அல்லது சோம்பலாகவோ இருக்கலாம்.

இத்தகைய பிழைகள் தரும் விளைவுகள் வாழ்நாள் காயங்களை உருவாக்கிவிடக் கூடும் என்பதை உணர்ந்து கவனமுடன் இருத்தல் அவசியம்

(Source:- http://xavi.wordpress.com/)
Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31