Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "India"

ச‌னீ‌ஸ்வர‌‌ர், எள், நல்லெண்ணெய் !

, , , ...

மா‌‌றி வரு‌கி‌ன்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச்‌ ‌சீ‌ர்கேட்டா‌ல் ம‌னித‌‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல இ‌ந்த ‌பிரப‌ஞ்சமு‌ம் (இயற்கை) இழ‌ந்து வருவது ஏராள‌ம் எ‌ன்பதை நா‌ம் உணராமல் இரு‌ப்பது வேதனை‌க்கு‌ரியது. பு‌தியனவெ‌ல்லா‌ம் ந‌‌‌ன்மை பய‌க்குமேயானா‌ல் ஏ‌ற்புடையது தா‌ன், ஆனா‌ல் பழைய ப‌ண்பாடுகளை ஆராயாம‌ல் புறந்தள்ளிவிடுவது விவேக‌மாகாது.

ப‌‌ண்டைய ப‌ண்பாடுக‌ளி‌ல் உணவு உ‌ள்பட அனை‌த்‌திலு‌ம் ஒரு காரண‌ம், ந‌‌ன்மை இ‌ல்லாம‌ல் இ‌ல்லை. உதார‌ணம் எ‌‌ள்ளிலிருந்து பெறப்படும் ந‌ல்ல எ‌‌‌ண்ணெ‌ய் இ‌ன்று வழ‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து ‌மறைந்துவிடும் ‌நிலை‌யி‌ல் உள்ளது.

எ‌ண்ணெ‌ய் வகைக‌ளி‌ல் த‌னி‌ச்‌சிற‌ப்பு வா‌ய்‌ந்தது நல்லெண்ணெய். இது ம‌ற்ற எ‌ண்ணெ‌ய்க‌ள் போ‌ல் இர‌த்த‌த்‌தி‌ல் கொழு‌ப்பு சேர ‌விடுவ‌தி‌‌ல்லை, மாறாக கொழு‌ப்பை அக‌ற்‌றி இர‌த்த‌த்தை சு‌த்‌திக‌ரி‌க்கக் கூடியது. மு‌‌ன்பெ‌ல்லா‌ம் இ‌ந்த எ‌ண்ணெ‌ய் ம‌ட்டுமே உண‌வி‌ல் சே‌‌ர்‌த்து கொ‌ள்ள‌ப்ப‌ட்டது. இ‌ன்று மா‌‌ற்று எ‌‌ண்ணெ‌ய்களே அ‌திக‌ம் புழ‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ‌கிராம‌ப் புற‌ங்க‌ளி‌ல் பா‌ல் சுர‌க்கு‌ம் பசு‌க்களு‌க்கு எ‌ள் பிண்ணா‌க்கு ‌‌சி‌ரிதளவும் அ‌த்துட‌ன் தே‌ங்கா‌ய், கடலை பு‌ண்ணா‌க்கு‌ம் சே‌‌‌ர்‌த்து கொடு‌ப்பா‌‌ர்க‌ள. ,அ‌திக‌ம் எ‌ள் பு‌ண்ணா‌க்கு கொடு‌த்தா‌ல் மா‌ட்டி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பை ‌தி‌ரி‌த்து பா‌ல் வ‌ழியே கொ‌ண்டு வ‌ந்து ‌விடு‌ம். பா‌ல் கொழு‌‌ப்பு ‌‌நிறை‌ந்து தரமானதாக இரு‌க்கு‌ம், ஆனா‌ல் மாடு இளை‌த்து‌விடு‌ம். இதனா‌ல் எ‌ள் பு‌ண்ணா‌க்கு அ‌திக‌ம் கொடு‌க்க மா‌ட்டா‌‌‌ர்க‌ள்.

பூ‌ப்பெ‌ய்து‌ம் இள‌ம் பெ‌ண்களு‌க்கு சு‌த்தமான ந‌ல்ல எ‌ண்ணெ‌ய் குடி‌ப்பத‌ற்கு கொடு‌ப்பா‌‌ர்க‌ள். ஏனெ‌ன்றா‌ல் இது (மூல) அ‌ண்ட அணு உ‌ற்ப‌த்‌தி உறு‌ப்புகளை ‌சீராக செய‌ல்பட வை‌க்கு‌ம், கரு‌ப்பை‌யி‌ல் அழு‌‌‌க்கை அக‌ற்று‌ம் த‌ன்மை வா‌ய்‌ந்தது. ந‌ல்ல எ‌ண்ணெ‌ய் கு‌ளிய‌ல் மூல சூ‌ட்டை த‌ணி‌க்கு‌ம், உட‌லி‌ல் படியு‌ம் எ‌ண்ணெ‌ய் பசையை அக‌ற்‌றி ம‌யி‌‌ர் க‌ண்களை சு‌த்த‌மாக வை‌த்‌திரு‌க்கு‌ம். இதனா‌ல் ‌வியர்வை வெ‌ளியே‌ற்ற‌ம் ‌சீராக இரு‌க்கு‌ம்.

கோயி‌ல்க‌ளி‌‌ல் ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌தீப‌ம் ஏ‌ற்று‌ம் வ‌ழக்கமு‌ம் ஒரு ‌சிற‌ப்பு அ‌ம்சமேயாகு‌ம். ‌தீப‌ம் எ‌ரி‌ந்த எ‌ண்ணெ‌ய் பசை (ஆ‌வி நிலையில்) கருவரை‌யி‌ன் சுவ‌ர்க‌ளி‌ல் உ‌ள்ள க‌ல்‌லி‌ன் ‌மீது படியு‌ம், அ‌த்துட‌ன் க‌ற்பூர‌ம் எ‌ரி‌ந்த சுட‌ர் படி‌ந்து கொ‌ள்ளு‌ம். இவை க‌ல்‌லி‌ன் குண‌த்துட‌ன் சே‌ர்‌ந்து இறைவனை வ‌ழிபட கருவறை‌க்கு‌ள் செ‌ல்லு‌ம் அனைவரு‌க்கு‌ம் இது ஆரோ‌க்‌கிய‌த்தை அளி‌க்க வ‌ல்லதாகும்.

உதாரண‌ம், ந‌‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் க‌ற்பூர‌ச் சுடரை கல‌ந்து “ஆரோ‌க்யமை” எ‌ன்று ஒ‌ன்று நெ‌ற்‌றி‌யி‌ல் பொ‌ட்டு வை‌த்து‌க் கொ‌ள்வது பழைய பழ‌க்க‌ங்க‌ளி‌ல் ஒ‌ன்று. இது ஆரோ‌க்‌கிய‌த்துட‌ன் ‌சி‌ந்தனை‌க்கு‌ம் சுட‌ர் தர வ‌ல்லது. எ‌ள்ளு‌ம், எ‌ண்ணெய்யு‌ம் எ‌ரி‌ந்து வரு‌ம் புகை மணம் அத‌ன் ஆ‌வி இ‌ந்த‌ப் பூவுல‌கி‌ல் ம‌ட்டும‌ல்ல‌ ‌பிரப‌ஞ்ச‌த்‌தினூடே ம‌னித‌ன் கொ‌ண்டு‌ள்ள தொட‌‌‌ர்பை ‌நீ‌ட்டி‌க்க வ‌ல்ல‌து எ‌ன்பது ஆ‌ச்ச‌ர்யமான உ‌ண்மை.

ச‌னீ‌ஸ்வர‌ர்

‌கிரக‌ங்க‌ளி‌ல் த‌னி‌ச்‌சிற‌ப்பு வா‌ய்‌ந்த ‌கிரக‌ம் ச‌னி எ‌ன்பது நம‌க்கு‌த் தெ‌ரியும். இவ‌ர் ஆயுளை ‌நி‌ர்ணயி‌ப்பவ‌ர். கொடு‌ப்ப‌திலு‌ம் அ‌ழி‌ப்ப‌திலு‌ம் ஈ‌ஸ்வரனு‌க்கு ‌நிகரானவ‌ர். 30 ஆ‌ண்டி‌ல் சூ‌ரியைன ஒரு முறை சு‌ற்‌றி முடி‌க்ககும் இவ‌ர் ஒருவ‌ர் ஜாதக‌த்‌தி‌ல் கோசார ‌‌ரீ‌தி‌யி‌ல் ச‌ந்ரா ல‌க்ன‌த்‌தி‌ற்கு 12, 1, 2 ‌ல் வரு‌‌ம் போது ஏழரை ச‌னியாவா‌‌ர், 8‌‌ல் வரு‌ம்போது அ‌ட்டம‌ச் ச‌னியாவா‌‌ர், இ‌ந்த கால க‌ட்ட‌த்‌தி‌ல் கு‌றி‌‌ப்‌பி‌ட்ட ஜாதகரு‌க்கு பெரு‌ம் கொடுமை‌யிழை‌ப்பா‌‌ர் எ‌ன்பது ஜோ‌திட சா‌ஸ்‌திர‌ம் க‌ண்ட உ‌ண்மை. முத‌ல் சு‌ற்று‌க்கு மறு சு‌ற்று ந‌ன்மையு‌ம் செ‌ய்வா‌ர்.

ச‌னி‌யி‌ன் (ச‌மி‌த்து) தா‌னிய‌ம் எ‌‌‌ள்!

சோ‌திட சா‌ஸ்‌திர ‌வி‌தி‌யி‌ன்படி ச‌னி‌யி‌ன் ச‌மி‌த்து எ‌‌ள், வாகன‌ம் காக‌ம். பொதுவாக ஏழரை, அ‌ட்டம ச‌னி நட‌ப்‌பி‌ல் உ‌ள்ளவ‌‌ர்களு‌க்கு வரு‌ம் (கோளாறுக‌ள்) (கோப‌ம் - இறக‌ம்) + (ஆறு - வ‌ழி) தா‌ன் எ‌ன்‌கி‌ன்ற எ‌ண்ண‌ம். கோப‌ம், இர‌த்த‌த்‌தி‌ல் உ‌‌‌‌ஷ‌்ண‌ம் அ‌திக‌ரி‌ப்‌பினா‌ல் ஏ‌ற்படு‌ம் டெ‌ன்ஷ‌ன், ம‌ற்றவ‌‌ர்களை ம‌தி‌க்காத த‌னி‌ச்சையான செய‌ல்பாடு, இர‌த்‌த‌த்‌தி‌ல் கொழு‌ப்பு ‌மிகு‌தியாக உ‌ள்ளவ‌‌ர்களு‌க்கு இ‌ந்த சமய‌த்‌தி‌ல் மூல‌க் கொ‌தி‌ப்பு, எ‌ளி‌தி‌ல் காத‌ல் காம வய‌ப்படுத‌ல் போ‌‌ன்ற வ‌ற்றா‌ல் அ‌திக‌ம் பா‌தி‌ப்பு வரு‌ம் எ‌ன்பது சோ‌திட சா‌ஸ்‌திர ‌வி‌தி ம‌ட்டும‌ல்ல உ‌ண்மை. ‌

கிரக‌ங்க‌ள் அனை‌த்தும் சூ‌‌ரிய‌னிட‌ம் இரு‌ந்து ஒ‌ளியை பெ‌ற்று ‌பிர‌திப‌லி‌‌ப்பவை, ச‌னியு‌ம் அதுபோலவே. ச‌னி ‌நீல ‌கிரக‌ம் எ‌ன்பது ஆ‌ய்வு க‌ண்ட உ‌ண்மை, சூ‌‌ரிய‌னி‌‌லிரு‌ந்து வரு‌ம் புற ஊதா க‌தி‌ர்களை அ‌திக‌ம் ‌பிர‌திப‌லி‌க்க வ‌ல்ல ‌கிரக‌ம் ச‌னி. இ‌க்க‌தி‌ர்க‌ள் உட‌லி‌ல் உ‌ள்ள நர‌ம்புகளை அ‌திவேகமாக செய‌ல்பட‌த் தூ‌ண்டு‌ம், மெ‌ன்மையான பாக‌ங்க‌ளி‌ல் உ‌ஷ‌ண்‌த்தை அ‌‌திக‌‌ரி‌க்க‌ச் செ‌ய்யு‌ம், க‌தி‌ர்க‌ளி‌‌ன் உ‌ஷண‌ம் ம‌ட்டும‌ல்ல, ஊதா வ‌ண்ண‌த்‌தி‌ன் குணமு‌ம் நர‌ம்புக‌ளி‌ன் செயலை தூ‌ண்டு‌ம். இத‌ன் காரணமாக ஏழரை ம‌ற்றும் அ‌ட்டம ச‌னி நட‌ப்‌பி‌ல் உ‌ள்ளவ‌ர்களு‌க்கு இ‌ந்த பா‌தி‌ப்பு அ‌திக‌ம் இரு‌க்கு‌ம்.

ம‌ற்றவ‌‌ர்களு‌க்கு‌ம் ச‌னி‌யி‌ன் பா‌தி‌ப்பு இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்வத‌ற்‌கி‌ல்லை, ஏனெ‌ன்றா‌ல் ஜாதக ‌‌‌ரீ‌தியாக பா‌‌ர்‌த்தா‌ல் ச‌னி தசை பு‌த்‌தி, அ‌ந்தர கால‌ம் போ‌ன்றவ‌ற்‌றிலு‌ம் பா‌தி‌ப்பு உ‌ண்டு. ச‌னி வார‌ம் இ‌ந்த க‌தி‌ர்க‌ளினா‌ல் அனைவரு‌க்கு‌ம் பா‌தி‌ப்பு இரு‌க்கு‌ம். ஆனா‌ல் ஜனன கால ஜாதக‌த்‌தி‌ல் சனி ந‌ல்ல ‌‌நிலை‌யி‌ல் இரு‌ந்தா‌ல் இ‌ச்செயலை தா‌க்கு‌ப்‌பிடி‌க்கு‌ம் ச‌க்‌தி உட‌லி‌ல் இரு‌க்கு‌ம். வானி‌ல் ‌நி‌‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு ரா‌சியும் அத‌ற்கான பாகை ‌வி‌ட்டு மறு ரா‌சி‌க்கு ‌கிரகம் செ‌ல்வதை பெய‌‌ற்ச்‌சி எ‌‌ன்கிறோ‌ம். இது சமய‌ம் ‌கிரக‌ங்க‌‌ளி‌ன் க‌தி‌ர் ‌வீ‌ச்சுக‌ள் வ‌‌லிமை உடையதாக இரு‌க்கு‌ம். ‌பி‌ன்பு படி‌ப்படியாக குறையு‌ம், அதனால் பெய‌‌ற்‌ச்சி‌யி‌ன் போது ‌கிரக ‌பி‌‌ரீ‌த்‌தி செ‌ய்து வணங்குவது ந‌ல்லது எ‌ன்ப‌ர்.

ம‌ற்றவ‌‌ர்களு‌க்கு‌ம் ச‌னி‌யி‌ன் பா‌தி‌ப்பு இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்வத‌ற்‌கி‌ல்லை, ஏனெ‌ன்றா‌ல் ஜாதக ‌‌‌ரீ‌தியாக பா‌‌ர்‌த்தா‌ல் ச‌னி தசை பு‌த்‌தி, அ‌ந்தர கால‌ம் போ‌ன்றவ‌ற்‌றிலு‌ம் பா‌தி‌ப்பு உ‌ண்டு. ச‌னி வார‌ம் இ‌ந்த க‌தி‌ர்க‌ளினா‌ல் அனைவரு‌க்கு‌ம் பா‌தி‌ப்பு இரு‌க்கு‌ம். ஆனா‌ல் ஜனன கால ஜாதக‌த்‌தி‌ல் சனி ந‌ல்ல ‌‌நிலை‌யி‌ல் இரு‌ந்தா‌ல் இ‌ச்செயலை தா‌க்கு‌ப்‌பிடி‌க்கு‌ம் ச‌க்‌தி உட‌லி‌ல் இரு‌க்கு‌ம். வானி‌ல் ‌நி‌‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு ரா‌சியும் அத‌ற்கான பாகை ‌வி‌ட்டு மறு ரா‌சி‌க்கு ‌கிரகம் செ‌ல்வதை பெய‌‌ற்ச்‌சி எ‌‌ன்கிறோ‌ம். இது சமய‌ம் ‌கிரக‌ங்க‌‌ளி‌ன் க‌தி‌ர் ‌வீ‌ச்சுக‌ள் வ‌‌லிமை உடையதாக இரு‌க்கு‌ம். ‌பி‌ன்பு படி‌ப்படியாக குறையு‌ம், அதனால் பெய‌‌ற்‌ச்சி‌யி‌ன் போது ‌கிரக ‌பி‌‌ரீ‌த்‌தி செ‌ய்து வணங்குவது ந‌ல்லது எ‌ன்ப‌ர்.

ச‌னீ‌ஸ்வரரு‌க்கு எ‌ள் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட பொரு‌ள்க‌ள் : எ‌ள் சாத‌ம், எ‌ள் உரு‌ண்டை, எ‌ள் மாவு போ‌ன்றவை நெ‌ய்வே‌த்ய‌ம் செ‌ய்து உ‌ண்பது இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள கொழு‌‌ப்பை அக‌ற்‌றி ‌சீரான செயலை உட‌லி‌ல் ஏ‌ற்படு‌த்து‌ம். ச‌னி‌ப்பெய‌ற்‌சி‌யி‌ன் போது கரு‌ப்பு து‌ணி‌யி‌ல் எ‌ள்ளை முடி‌ந்து ‌ஈ‌ஸ்வர‌ன் கோ‌வி‌லி‌ல் உ‌ள்ள ச‌னி‌யை வண‌ங்‌கி ‌பி‌ன் அ‌ந்த எ‌‌ள்ளை கோ‌யி‌லி‌ல் உ‌ள்ள பர‌த்யேக கு‌ண்ட‌த்‌தி‌லிடுவது வழ‌க்க‌ம். இதனா‌ல் ஏ‌ற்படு‌ம் கரு‌ம்புகை வ‌ண்ண‌ம் புற ஊதா க‌தி‌ர்களை பூ‌மி‌யி‌ன் ‌மீது படாம‌ல் தடு‌க்கு‌ம். காரண‌ம் கரு‌ப்பு வ‌ண்ண‌ம் ம‌ட்டுமே புற ஊதா க‌தி‌ர்கள் ஊடுருவாத ‌நிறம். இ‌ப்புகை கா‌ற்‌றி‌ல் உ‌ள்ள ந‌ச்சு‌த்தன்மையை முறி‌க்கு‌ம்.

ச‌னி‌யி‌ன் வாகன‌ம் காக‌ம்

பறவைக‌ளி‌ல் கால‌‌த்தை ம‌னித‌னு‌க்கு உண‌ர்‌த்து‌ம் இன‌ம் காக‌ம். இது ச‌னீ‌ஸ்வர‌‌ரி‌ன் வாகன‌ம், ‌நிற‌ம் கருமை. ச‌னீ‌ஸ்வர‌ரி‌ன் பா‌‌ர்வையான புற ஊதா க‌தி‌ர்களை தடு‌க்கவ‌ல்லது. ஏழறை, அ‌ட்டம சனி நட‌ப்‌பி‌ல் உ‌ள்ளவ‌‌ர்க‌ள் இத‌ற்கு உணவ‌ளி‌த்து வண‌ங்குவது ந‌ல்லது.

எ‌ள், ந‌ல்ல எ‌ண்ணெ‌ய் உபயோக‌ம் எ‌ன்பது வெறு‌ம் உணவு கலா‌ச்சார‌ம் ம‌ட்டும‌ல்‌ல, உட‌லி‌ல் தேவை‌யி‌ல்லாதவ‌ற்றை ‌வில‌க்‌கி வான ம‌ண்டல‌த்‌தி‌ன் வ‌லிய பா‌தி‌ப்பை கூட வா‌ழ்‌வியலு‌க்கு எ‌ளிமையா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ம் பண்பாட்டை நா‌ம் பெ‌ற்‌றிரு‌ப்பது ‌விய‌ந்து பெருமை கொ‌ள்ள வே‌ண்டியது

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு !

, ,

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது.

இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

மாவிளக்கேற்றுதல்

வைணவ சம்புரதாயங்களைப் பின்பற்றும் சில இல்லங்களில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை உள்ளத்தில் நினைத்து மாவிளக்கேற்றுதல் மரபு. "எங்கள் குலவழக்கப்படி முதல் நாளே அக்கம் பக்கத்து வீடுகளில் மடிப்பிச்சை எடுத்து அந்த அரிசியை மறுநாள் ஊற வைத்து, உரலில் இடித்து நாட்டுச் சர்க்கரை கலந்து இரு உருண்டைகளாகச் செய்து, மலை போன்ற அந்த இரு உருண்டைகளில் நடுவில் குழி போல் செய்து நிறைய நெய் ஊற்றி, பஞ்சில் திரி செய்து "கோவிந்தா" என்ற நாமம் முழங்க மாவிளக்கேற்றுவோம்" என்கிறார் சென்னை தி.நகரில் வசிக்கும் திருமதி பூமா.

நிவேதனம்

பின் விளக்கு மலையேறும் நேரம் சீரான்னம் (கேசரி) வடை முதலியன நிவேதனம் செய்து உறவினர்களுக்கு வடை, பாயசத்துடன் விருந்தளிப்பது வழக்கம் என்கிறார் இவர். அன்று இரவு விரதமிருப்பவர்கள் உணவருந்துவதில்லை. பால், பழம் போன்றவையும், காலை பெருமாளுக்கு நிவேதனம் செய்த சீரான்னமும் சாப்பிடுவதில் தவறில்லை.

அகண்ட தீபம்

இன்னும் சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர். இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர்.

துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்கு வந்துதவிய அந்தணர்களுக்கும் விருந்தளிப்பது (சமாராதனை) சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

அந்த குறையொன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான். வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

பசு பராமரிப்பு - தாயாக விளங்கும் பசு

, ,

காஞ்சி மஹா பெரியவர் அருளியது

வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற வர்க்கத்தைச் சார்ந்ததே பசு. அப்படியிருந்தாலும் அது "அம்மா" என்று அடி வயிற்றிலிருந்து வாய் விட்டுக் குரல் கொடுக்கிறது. "அம்மா" என்று சொல்கிற அந்தப் பசுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது.

அம்மாவின் முதல் லக்ஷணம் என்ன? பால் கொடுப்பது தான். நாம் குழந்தையாயிருந்த போது நம்மைப் பெற்றெடுத்த தாயார் நமக்குப் பாலூட்டி உயிரூட்டினாள். அந்தக் குழந்தைப் பிராயத்திலேயே பசுவும் நமக்குப் பால் கொடுத்து ப்ராண ரiக்ஷ தந்தது. பெற்ற தாய் பால் கொடுப்பது நம்முடைய குழந்தைப் பருவத்தோடு முடிந்து விட்டது. ஆனால் நமக்கு வயதான பின்னரும் பசு தரும் பாலும், அதிலிருந்து பெறப்படுகிற தயிர், மோர், நெய் ஆகியனவும் நம் ஆகாரத்தில் தொடர்ந்து இடம் பெறுகின்றன.

ரொம்பவும் வயதான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் இருக்கிறது. நம்முடைய ஆயுளின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய கால கட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடை யஆயுள் காலம் பூராவும் பால் தருகிறது. அதனால் தான் உறவுகளிலேயே பரமோத்தமமான தாயுறவைப் பசுவுக்குத் தந்து "கோமாதா" என்றே சொல்வது.

"கோ" என்றால் "பசு" என்று எல்லோருக்கும் தெரியும்.

அந்த "கோ"வை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்று தொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள்.

அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும்.

பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில் தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா, ஸ்ரீமாதா என்று இன்னும் இரண்டு மாதாக்கள்.

இந்த உலகில் எதுவுமே விடாமுயற்சியை எதிர்த்து நிற்க முடியாது : அன்னை!

, ,

புகழ்பெற்ற வேட்கோவர் பெர்னாட் பாலிஸி (Bernard Palissy) அழகான வண்ணங்களில் எனாமல் பூசப்பட்ட பளபளப்பான சீனப் பீங்கான் செய்யும் முறையை, மறைந்துபோன அந்தக் கலை ரகசியத்தை மீண்டும் கண்டுபிடிக்க விரும்பினார்.

மாதக்கணக்காக, ஆண்டுக் கணக்காக சோர்வு அடையாமல் தமது பரிசோதனைகளைச் செய்து வந்தார். தம்முடைய உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் தம்முடைய ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். இரவு பகலாய் பல நாட்கள் தாம் கட்டிய சூளையிலேயே கவனம் செலுத்தினார், பீங்கான் கோப்பைகள் செய்யவும் அவற்றை சுடவும் புதிய புதிய முறைகளை முடிவே இல்லாதபடி பரீட்சை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். யாரும் அவருக்கு உதவி செய்யவோ உற்சாகமூட்டவோ இல்லை. அவருடைய நண்பர்களும் அண்டை அயலாரும் அவரைப் பைத்தியக்காரன் என்றார்கள், அவருடைய மனைவிகூட அவரைக் குறை கூறினாள்.

பணம் இல்லாமல் பல தடவைகள் அவர் தம் பரிசோதனைகளை நிறுத்திவைக்க வேண்டியிருந்தது. ஆனால் பணம் கிடைத்ததும் புதிய துணிவோடு வேலையைத் தொடங்குவார். கடைசியாக ஒரு நாள் அவரிடம் சூளைக்கு வேண்டிய விறகுக்குக்கூட வழியில்லாது போயிற்று. அதனால் குடும்பத்தாரின் ஓலத்தையும் பயமுறுத்தல்களையும் சட்டை செய்யாமல் மேசைகள் நாற்காலிகள் முதலிய தமது மர சாமான்களையெல்லாம் கடைசிக் குச்சிவரை நெருப்பில் போட்டுவிட்டார்.

அவை எல்லாம் எரிந்து சாம்பலாயின. பிறகு அவர் சூளையைத் திறந்தார். அது பளபளப்பான பீங்கானால் நிரம்பியிருந்தது. அதனால் அவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது. ஆனால் அதைக் கண்டுபிடிக்க அவர் எத்தனை ஆண்டுகள் தியாகம் செய்ய வேண்டியிருந்தது!

அவருடைய வெற்றிவேளை வரும் வரை காத்திருக்க முடியாமல், அவருக்கு அளவற்ற தொல்லைகள் கொடுத்து அவருடைய வேலையை மேலும் கஷ்டமாக்கிய அவருடைய மனைவிக்கும் நண்பர்களுக்கும் என்ன இல்லை? பொறுமை இல்லை, அவ்வளவுதான். அது அவரிடம் ஒருபோதும் குறையாது இருந்தது, அவரை ஒருபோதும் கைவிடாதிருந்தது, முடிவில் எல்லாக் கஷ்டங்களையும், இகழ்ச்சிகளையும் வெல்லச் செய்தது. எது? விடாமுயற்சி. எல்லா சக்திகளையும் விட வல்லமையுடைய சக்தி அது.

இந்த உலகில் எதுவுமே விடாமுயற்சியை எதிர்த்து நிற்க முடியாது. மிகப்பெரிய சாதனைகளும் அயராத சிறு முயற்சிகள் பலவற்றின் திரண்ட தொகுதிதான்.

மழைத் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே இடத்தில் விழுவதனால் பிரம்மாண்டமான பாறைகள் முற்றிலும் அழிந்து போயிருக்கின்றன.

ஒரு மணல் துகள் அதிக சக்தி வாய்ந்ததில்லைதான். ஆனால் அவைகளே நிறைய சேரும்போது மணற் குன்றுகளாகி பெருங்கடலைத் தடுத்துவிடுகின்றன.

நீங்கள் இயற்கை வரலாறு (தாவர இயல், விலங்கு நூல், கருப்பொருள் நூல் இம்மூன்றின் தொகுதி) பற்றிப் படிக்கும்போது எவ்வாறு சிறு உயிரினங்கள் ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்து கடலுக்கடியில் மலைகள் உருவாகியுள்ளன, அவற்றின் விடாப்பிடியான முயற்சியினால் எப்படி அற்புதமான தீவுகளும் தீவுக் கூட்டங்களும் கடல் அலைகளுக்கு மேலாகத் தோன்றுகின்றன என்று படிப்பீர்கள்.

நீங்கள் திரும்பத் திரும்பச் செய்யும் சிறு சிறு முயற்சிகளும் பெரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்று நீங்கள் கருதவில்லையா?

பொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம்

நன்றி : வைகறை
(ஸ்ரீ அரவிந்த ஆசிரமக் காலாண்டு வெளியீடு - ஆகஸ்டு, 15)

தமிழக வரைபடம்!

, , , ...

மேலே உள்ள படம் தமிழக வரைபடம்
Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31