Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "Kavithai"

உலகின் மிகப்பழைமையான காதல் கவிதை !

, ,

மணவாளனே,
என் நெஞ்சிற்கினியவனே,
பெரும்பேரழகன் நீ,
தேனைப் போன்று இனியவனே…

மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லபடுவேன்
பள்ளியறைக்கு.

சூடேற்றும் வரிகளுடன் தொடங்கும் இந்த கவிதைதான் உலகில் இதுவரை நாமறிந்த காதல் இலக்கியங்களிலேயே மிகவும் பழமையான படைப்பு. இன்றைய ஈராக்கில் - அன்றைய மெசபடோமியாவின் நிப்பூர் என்ற நகர் இருந்த பகுதியில்- 1880 இல் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு டேப்லட்டில் இந்த கவிதை காணப்பட்டது.

அது சுமேரியர்களின் மொழியில் கியூனிபாஃர்ம் எனப்படும் ஆதிகால வரிவடிவத்தில் எழுதப்பட்டது. இப்போது இப்போது துருக்கியில் இஸ்தான்புல் மியூசியமான The Museum of the Ancient Orient இல் இருக்கிறது.

பண்டைய சுமேரிய மாநகரமான ஊர் என்ற நகரில் கிறிஸ்து பிறப்பதற்கு 2030 ஆண்டுகளுக்கு முன் இதை எழுதிய ஒரு கவிதாயினி 4000 நம்மை அசரவைக்கிறார்!
முதலில் அந்த கவிதையைப் படியுங்கள், பிறகு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்கிறேன்.

முழு கவிதை இதோ:

மணவாளனே,
என் நெஞ்சிற்கினியவனே,
பெரும்பேரழகன் நீ,
தேனைப் போன்று இனியவனே…

மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

நீயே என்னைச் சிறைப்படுத்தினாய்.
உன் முன் நான் நடுங்குற்று நிற்கக்கடவேன்.
மணவாளனே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.
சிங்கமே,
உன்னால் நான் எடுத்துச்செல்லப்படுவேன்
பள்ளியறைக்கு.

மணவாளனே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

படுக்கையறையில், தேன் சொட்ட
உன் பெரும்பேரழகை என்னைச் சுவைக்க விடு.

சிங்கமே,
என்னை விடு, உன் மேனியை தடவிக்கொடுக்கிறேன்.
அன்புகமழும் என் தடவல் தேனினும் சுவை மிக்கவது.

மணவாளனே, உன் இன்பத்தை என்னிடமிருந்து நீ பெற்றாய்.
என் தாயிடம் சொல், அவள் சுவையாகத் தின்னக் கொடுப்பாள்.
என் தந்தையிடம் சொல், அவர் பரிசுகளைக் கொடுப்பார்.

உன் ஆன்மா-
உன் ஆன்மாவை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
மணவாளனே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.
உன் இதயம்-
உன் இதயத்தை எங்கே கிளர்ச்சியூட்டுவது என நான் அறிவேன்,
சிங்கமே,
விடியும்வரை எங்கள் வீட்டிலேயே தூங்கு.

நீ என்னைக் காதலிப்பதால், நீ என்னை தீண்டி அருள்வாய்.
என் கடவுளே, என் காவலனே, என் ஷூ-ஸின்,
என்லிலின் இதயத்தை சந்தோஷப்படுத்தியவனே,
நீ என்னை தீண்டி அருள்வாய்.

உனது இடம் தேனைப் போன்று சிறந்தது.
உன் கைகளை அதன் மீது வைத்தருள்வாய்.
உனது கையை கிஷ்பான் உடை மீது கொண்டுவருவாய்.
கிஷ்பான் ஸிகின் உடையைப் போல உன் கரங்களை அதன் மீது கிண்ணமாய் குவி்ப்பாய்.

- காமமும் காதலும் ததும்பும் இந்த பாடல்தான் இதுவரை உலக இலக்கியம் கண்ட முதல் காதல் பாடல்.

இந்த டேப்லட்கள் உருவாக்கப்படும் விதம் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். ஈர களிமண்ணை ஒரு சட்டக வடிவில் அமைத்துக்கொண்டு அதன் மீது ஒரு ஸ்டைலஸால் சித்திர எழுத்துக்களான கியூனிஃபார்ம் எழுத்தில் எழுதுவார்கள். பிறகு அந்த களிமண் டேப்லட்டை தீயில் சுடுவார்கள். நம்மூரில் சுடுமண் சிற்பங்களை உருவாக்குவது போல. அந்த சுட்ட சுவடிகள் நெடுங்காலத்துக்கு நிலைத்து நிற்கும்.

அன்றைய சுமேரியத்தில் புனிதத்திருமணம் என்ற விழா நடக்கும். அப்போது சுமேரிய அரசன் சுமேரியர்களின் காதல் மற்றும் யுத்த தெய்வமான இனானாவை ‘திருமணம் செய்துகொள்வான்’. நாட்டின் வளத்தையும் ராஜாவின் ஆண்மையையும் போற்றும் அந்த சடங்கின் ஒரு பகுதியாக இனானாவின் தலைமை பூசாரியாக இருக்கக்கூடிய ஒரு பெண் இனானாவாக தோன்றுவாள். அவனது அழைப்பை ஏற்கும் பெண் பூசாரி ராஜாவோடு படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைத்து, பாடல் ஒன்றையும் இயற்றி பாடுவாள். ஷூ-ஸின் என்ற ஒரு சுமேரிய மன்னனை வேண்டி அழைத்த ஒரு பெண்ணின் பாடல் தான் நீங்கள் படித்தது.

4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆணாதிக்கத்தை மட்டுமல்ல, பெண்கள் கருத்து வெளிப்பாட்டு சுதந்தரத்தையும் இந்த பாடல் காட்டுகிறது. ஆண்மைக்கு முன் மண்டியிடும் பெண்ணின் உடல் பரிசல்ல இந்த கவிதை. ஒரு குறிப்பி்ட்ட வரலாற்று சூழலுக்குள், தங்களுக்கிருந்த வட்டத்துக்குள்ளும், அந்த பெண் பூசாரி தனது உடலைத்தான் கொண்டாடுகிறாள். மெய் தீண்டும் இன்பத்தை அவள் பகிர்ந்துகொள்கிறாளே ஒழிய, தாம்பாளத்தட்டில் வைத்து ராஜாவுக்கு பரிசாக அளிக்கவில்லை.

சுமேரியர்கள் காதலையும் காமத்தையும் பூடமாக்கிவிடவில்லை என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அரசனும் பெண் பூசாரியும் கலந்தால், நாடு செழிப்புறும் என்று நம்பினார்கள்.

காமத்தை வெளிப்படையாக எழுதிவிட்டார்களே என்று தமிழ் பெண் கவிஞர்களைப் பார்த்து சீறிப்பாய்ந்த இன்றைய ஆண் இலக்கியவாதிகள் அவசியம் படிக்கவேண்டிய கவிதை இது. உலகின் ஆதி காதல் கவிதை இவ்வாறு இருப்பது ஒரு வகையில் கவிதை இலக்கிய வரலாறு சுதந்தரமான பெண் எழுத்தாளர்களின் சார்பாக அளிக்கும் நிரந்தர poetic justice!

(http://senthilapi.wordpress.com, http://pudhusol.wordpress.com, http://qa.poignantguide.net/ )

எனது கவிதை கிறுக்கல்கள் !

, , , ...

வெற்றியின் மந்திரம் !

வருவதைக் கண்டு மயங்காதே !
போவதைக் கண்டு கலங்காதே !


(இந்த வரிகள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு நூலில் இருந்து)

முடிவு!

அனைவரும் இறுதியாண்டின் முடிவை
எதிர்பார்த்து கொண்டிருந்த தருவாயில்!
நான் என்னவளின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!



தொன்றுதொட்டு வரும் புலம்பல்

இந்த பூமியில் நாம் அழுது கொண்டே பிறப்பது
நம் பெற்றோரை அவர்களின் கடைசி காலத்தில் அழ வைக்கவா?


முரண்பாடு ! [விலை !]

இறைச்சிக் (மாமிச) கடையில் இறந்த உயிருக்கு தான் விலை,
அது போல மனித உலகில் உயிருள்ள வரை தான் அவனுடைய உயிருக்கு மதிப்பு!


சீர்...!

இவன் சீர் கேட்டான் இவனுக்கு வரும் துணைவியிடம் !
ஆனால்,இவன் எதிர்க்கிறான் யாரேனும் தன் தங்கைக்கு சீர் கேட்டால் !



மதிப்பு.....!

ஒடும் அனைத்துப் பொருள்களும் மதிப்பு வாய்ந்தவை (மனிதன் உள்பட)
அது பழுது அடையாமல் இருக்கும் வரை !



(குறிப்பு:- இக் கவிதைகள் யாவும் நானே எழுதியது வலை பதிவுகளில் இருந்து சுட்டவை அல்ல. மேலும்,மேலே உள்ள கவிதைகளில் எதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் தவறு இருந்தால் கூறுங்கள் திருத்திக்கொள்கிறேன் !)

படித்ததில் பிடித்த சிலகவிதைகள்.....

, , , ...

முடிந்து போன துவக்கங்கள்

கடந்த காலத்தில்தோல்விகள் பல,
நல்லவேளை வெல்லவில்லை
என்றுசொல்ல வைக்கின்றன.

கிடைக்காத நுழைவுத் தேர்வு ஒன்று
என் எதிர்காலத்தை வெளிச்சப்படுத்தியிருக்கிறது.

கிடைக்காதவேலை ஒன்று தந்திருக்கிறது
கிடைத்தற்கரிய வேலையை.

துரோகமிழைத்த நண்பன் கற்றுத் தந்திருக்கிறான்
தாங்கும் வலிமையை.

ஏமாற்றிய நண்பன்பெற்றுத் தந்திருக்கிறான்
ஏமாறாத மனதை.

தோற்றுப் போன காதல் பரிசளித்திருக்கிறது
அன்பான மனைவியையும்அழகான குழந்தையையும்.

ஒவ்வோர் தோல்விக்கும் பின்னும்
கடவுள் இருக்கிறார்.
கவனித்துக் கொண்டே


SOFTWARE ENGINEER LIFE!


நண்பர்கள் மறப்பாய். .
உணவு குறைப்பாய். .
தூக்கம் தொலைப்பாய். .
கண்ணாடி அணிவாய். .
இமெயிலில் வாழ்வாய். .
தாய்மொழி மறப்பாய். .
புத்தகக் கடையில் version கேட்ப்பாய். .
கனவிலும் logic பேசுவாய். .
கணிப்பொரியய் பாடல்களால் நிரப்புவாய். .
பின்னிரவில் தொலைக்காட்சி ரசிப்பய். .
அவ்வப்போது அபூர்வமாய் சிரிப்பாய். .
நேரத்தைவிட வேகமாகிப்போகும்
வாழ்க்கையை விட்டு வெளியே
வரத்தெரியாமல்
கணிப்பொறிக்குள்
சிக்கி தொலைந்துபோவாய்!




Note: இவை யாவும் என்னுடையவை அல்ல இணையத்தில் சுட்டவை

ஓ! மாவீரர்களே!

, ,

உண்ர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்...

ஓ! மாவீரர்களே!

Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31