Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "Poem"

உறு‌‌தி வே‌ண்டு‌ம்......

, , ,

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்

பாரதிதாசன் பாடல்கள் !

, , , ...

Bharathidasan (April 29, 1891 - April 1, 1964; also spelt Bharatidasan, original name Kanaka Subburathinam) was a twentieth century Tamil poet and rationalist whose literary works handled mostly socio-political issues. His writings served as a catalyst for the growth of the Dravidian movement in Tamil Nadu. In addition to poetry, his views found expression in other forms such as plays, film scripts, short stories and essays. He was mentored by Mahakavi Subramanya Bharathi (after whom he called himself "Bharathidasan"). But Bharathidasan, unlike Bharathi rarely used words derived from Sanskrit in his works; also Bharathidasan's works were more political.



பாரதிதாசன் பாடல்கள்

இன்பத் தமிழ்

தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் -இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.
----------------
தமிழின் இனிமை
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரின் நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்
விழைகுவ னேனும் தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்.

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை - எனனைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில் போற் பேசிடும் மனையாள் = அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவ ராகும் வண்ணம் = தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்.

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர்வெண் ணிலவாம்
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம்
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் மூதிரை - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்
நன்மதுரஞ் செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா, உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே.
----------------------
தமிழ் உணவு

ஆற்றங் கரைதனிலே - இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்
காற்றிலுட் கார்ந்திருந்தேன் - வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர் - வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார், பழச்
சாற்றுச் சுவைமொழியார் - சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர் (ஆற்றங் கரைதனிலே)

நாட்டின் நிலைபேசிப் - பல
நண்பர்கள் கூடிஇருந்தனர் ஓர் புறம்
ஒட்டம் பயின்றிடுவார் -நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்
கோட்டைப் பவுன் உருக்கிச் - செய்த
குத்துவிளக்கைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே - மண்ணை
அள்ளுவர், வீழுவர், அம்புலி வேண்டுவர் (ஆற்றங் கரைதனிலே)

புனலும் நிலாவொளியும் - அங்குப்
புதுமை செய்தே நௌiந்தோடும், மரங்களில்
இனிது பறந்து பறந் தாங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்
தனிஒரு வெள்ளிக்கலம் - சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்,
புனையிருள் அந்திப் பெண்ணாள் - ஒளி
போர்த்ததுண்டோ எழில் பு>த்ததுண்டோ அந்த (ஆற்றங் கரைதனிலே)

விந்தை உரைத்திடுவேன் - அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள் - அது
முற்றுந் தெலுங்கில் முடிந்து தொலைந்தது
பிந்தி வடக்கினிலே - மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்? - கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன (ஆற்றங் கரைதனிலே)

பொருளற்ற பாட்டுக்களை - அங்குப்
புத்தமுதென்றனர், கைத்தளமிட்டனர்
இருளுக்குள் சித்திரத்தின் - திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடுமோ?
உருவற்றுப் போனதுண்டோ - மிக்க
உயர்வுற்ற தமிழ்மக்கள் உணர்வூ<ற்ற நல்வாழ்வூகருவுற்ற செந்தமிழ்ச் சொல் - ஒரு
கதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த (ஆற்றங் கரைதனிலே)

சங்கீத விற்பனனாம் - ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை
அங்கந்தப் பாட்டினிலே - சுவை
அத்தனையும் கண்டுவிட்டது போலவே
நம்குள்ளர் வாய்திறந்தே -நன்று
நன்றென ஆர்ப்பரித்தார் , அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில் - ஓர்
இன்பநறுங்கலி கேட்டது காதினில் (ஆற்றங் கரைதனிலே)

அஞ்சலை உன் ஆசை - என்னை
அப்புறம் இப்பூ<றம் போகவிடாதடி
கொஞ்சம் இறங்கிடுவாய் - நல்ல
கோவைப்பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களிப்பாய் - என்ற
வண்ணத் தமிழ்ப்பாதம் பண்ணிற் கலந்தென்றன்
நெஞ்சையும் வானத்தையூ<ம் -குளிர்
நீரையும், நிலவையூ<ம் தமிழர் குலத்தையூ<ம் (ஆற்றங் கரைதனிலே)

ஒன்றெனச் செய்ததுவே - நல்
உவகை பெறச் செய்ததே தமிழ்ப் போசனம்
நன்று தமிழ் வாழ்க -தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக, பல்குக
என்றும் தமிழ் வளர்க - கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக
இன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக. (ஆற்றங் கரைதனிலே)
-------------------------
மயில்
அழகிய மயிலே, அழகிய மயிலே
அஞ்சுகம் கொஞ்சி, அமுத கீதம்
கருங்குயி லிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தான்றி அங்கும் புலகித்
தாடு கின்றாய் அழகிய மயிலே.
உனது தோகைபுணையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்.
உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்தோ என்னவோ,
ஆடுகின்றாய், அலகின் நுனியில்
வைத்த உன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்,
சாயல்உன் தனிச்சொத்து, ஸபாஷ், குரகோஷம்.

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல் ஆடல் உள்உயிர்
இவைகள் என்aன எடுத்துப் போயின,
இப்போது என் நினைவு என்னும் உலகில்
மீண்டேன், உனக்கோர் விஷயம் சொல்வேன்,
நீயும் பெண்களும் நிகர் என்கின்றார்
நிசம் அது, நிசம், நிசம், நிசமே யாயினும்
பிறர்பழி தூற்றும் பெண்கள் இப்பெண்கள்,
அவர்கழுத்து உன் கழுத்தாகுமோ சொல்வாய்,
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்பதற்கே
இயற்கை அன்னை இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தான், உனக்கோ
கறையொன் றில்லால் கலாப மயிலே
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தான்,
இங்குவா, உன்னிடம் இன்னதைச் சொன்னேன்,
மனதிற் போட்டுவை, மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக.

புவிக்கொன் றுரைப்பேன், பூ<ருஷர் கூட்டம்
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால் அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே.
------------
காடு (காவடிச் சிந்து மெட்டு)

முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும், எதிர்
முட்டுகருங் கற்களும்நெ ருங்கும் - மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களில்த டுங்கும் - உள் நடுங்கும்

கிட்டிமர வேர்கள் பல கூடும் - அதன்
கீழிருந்து பாம்புவிரைந் தோடும் - மர
மட்டையசை வால்புலியின்
குட்டிகள் போய்த் தாய்ப்புலியைத்
தேடும் - பின் வாடும்

நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடி - கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால் கழற்றிப் பாயவருங்
காடு - பள்ளம் மேடு

கோளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு
தாளிபடத் தாவுகையில்
ஊளையிடும் குள்ளநரி
குன்றில்- புகும் ஒன்றி.

வானிடைஓர் வானடர்ந்து வாறு - பெரு
வண்கிணை மரங்கள் என்ன வீறு, நல்ல
தேனடை சொரிந்ததுவும்
தென்னைமரம் ஊற்றியதும்
ஆறு - இன்பம் சாறு.

கானிடைப் பெரும்பறை நோக்கும் - அது
காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும்
ஆனினம் சுமந்தமடி ஆறெனவே பால்சுரந்து
தீர்க்கும் - அடை ஆக்கும்.
-----------------
கானல்

வானும் கனல் சொரியும் - தரை
மண்ணும் கனல் எழுப்பும்.
கானவில் நான் நடந்தேன் - நிழல்
கணும் விருப்பத்தினால்
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக் கில்லை அங்கே
ஆன திசைமுழுதும் - தணல்
அள்ளும் பெருவெளியாம்.

ஒட்டும் பொடிதாங்கா - தெடுத்
தூன்றும் அடியும்சுடும்,
விட்டுப் புறங்குதித்தால் அங்கும்
வேகும், உளம் துடிக்கும்.
சொட்டுப் புனல்அறியேன் - ஒன்று
சொல்லவும் யாருமில்லை.
கட்டுடல் செந்தணலில் - கட்டிக்
கந்தக மாய் எரியும்.

முளைத்த கள்ளியினைக்-கனல்
மொய்த்துக் கரியாக்கி
விளைத்த சாம்பலைப்போய் - இனி
மேலும் உருக்கிடவே
கொளுத்தி டும் கானல் - உயிர்
கொன்று திfன்னும்கானல்
களைத்த மேனிகண்டும் - புறங்
கழுத்த றுக்கும்வெளி.

திடுக்கென விழித்தேன் - நல்ல
சீதளப் பூஞ்சோலை
நெடும் பகற்கனவில் - கண்ட
நெஞ்சுறுத் தும்கானல்
தொடர்ந்த தென்நினைவில் - குளிர்
சோலையும் ஓடையூ<மே
சுடவ ரும்கனலோ - என்று
தோன்றிய துண்மையிலே.
------------------------------
தமிழ் வளர்ச்சி

எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்
வெளியுலகில் சிந்தனையில் பூ<திது பூ<திதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு
தௌiவுற்றும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும் 1

உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நாற்கள்
ஓருத்தர் தலை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலனெ எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்
தமிழொளியை மதங்களிலேசாய்fக்காமை வேண்டும்
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்
எங்கள் தமிழ் உயர்வென்றுநாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம், குறைகளைந் தோமில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். 2
--------------------
தமிழ்க் காதல்

கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளர்த்தால்
கமழ்தரு தென்றல் சிலர் சிலிர்ப்பால்- கருங்
கண்மலரால் முல்லை வெண்ணைப்பால்
அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தின் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள ஒருநாள். 1

சோலை அணங்கொடு திண்ணையிலெ - நான்
தோளியை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்.
சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்ட மெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டிவிட்டாள் எனைத் தொட்டிழுத்தாள். 2
--------------
சங்க நாaதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே. (எங்)
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள். ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே. (எங்)
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதிதீரரென் று\ தூது சங்கே
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு. (எங்)
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குறுதி தனிற் கமழ்fந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம். (எங்)
-------------------------
புதிய உலகு செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (புதிய)
பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம் (புதிய)
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (புதிய)
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (புதிய)
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம் (பூ<திய)
----------------
தமிழன்

அறியச் செய்தோன் தமிழன்
அறிந்த அனைத்தும் வையத்தார்கள் அறியச் செய்தோன்.....
செறிந்து காணும் கலையின் பொருளும்
சிறந்த செயலும் அறமும் செய்து
நிறைந்த இன்ப வாழ்வைக் காண
நிகழ்த்தி, நிகழ்த்தி, நிகழ்த்தி முன்னாள் அறியச் செய்தோன்.....
காற்றுக் கனல்மண் புனலும் வானும்
தமிழன் கனவும் திறமும் கூட்டி
நாற்றிசை அழகை வாழ்வைச் செய்யுறர> நவின்று, நவின்று, நவின்று முன்னாள் அறியச் செய்தோன்...
எங்கும் புலமை எங்கும் விடுதலை
எங்கும் புதுமை கண்டாய் நீதான்
அங்குத் தமிழன் திறமை கண்டாய்,
அங்குத் தமிழன் தோளே கண்டாய் அறியச் செய்தோன்.......
--------------
குழந்தை

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு, நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அறஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ
குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ?
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிர்ப்பு.
வாரீர், அணைத்து மகிழவே ண்டாமோ?
பாரீர் அள்ளிப் பருகிடமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம், சிரித்தது வானமே.
----------முத்து மாமா

புதுக்கோயில் மதில்மேலே முத்துமாமா - இரண்டு
புறாவந்து பாடுவதேன் முத்துமாமா?
எதுக்காகப் பாடினவோ முத்துமாமா -நாமும்
அதுக்காகப் பாடுவமோ முத்துமாமா.
ஒதுக்கிடுமா ஆற்று நீரைக் கடல் வெள்ளம் என்னை
ஒதிக்கிவைக்க எண்ணலாமா முத்துமாமா?

முதல் மனைவி நானிருந்தும் முத்துமாமா - அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்துமாமா?
ஒதிய மரத்தின் கீழே முத்துமாமா - கோழி
ஒன்றை ஒன்று பார்ப்பதென்ன முத்துமாமா?
எது செய்ய நினைத்ததுவோ முத்து மாமா - நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா.
குதி குதியாய்க் குதித்துண்டு முத்துமாமா - எனக்குக்
குழந்தையில்லை ஆனாலும் முத்து - மாமா
எதிலும் எனக்கதிகாரம் முத்துமாமா - நீதான்
எப்போதுமே என் சொத்து முத்துமாமா.
--------------------
நீ எனக்கு வேண்டும்

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்கு பூ<கழ் வேண்டும்
தேனுக்கு பலாச்சுளை வேண்டும் - என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்

மீனுக்கு பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப்புலி வேண்டும் - என்
கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும்

வாளுக்கு கூர்மை வேண்டும்
வண்டுக்கு தேன் வேண்டும்
தோளுக்கு பூமாலை வேண்டும் அடி
தோகையே நீ எனக்கு வேண்டும்

நாளுக்கு புதுமை வேண்டும்
நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும்
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்.
-----------------
சாவை நீக்கு

கண்டவுடன் காதல் கொண்டேன் உன்மேலே -நீ
கண்வைக்க வேணுமடி என்மேலே
அண்டினேன் ஆதரிக்கக் கையோடு - கேள்
அதுதானே தமிழர்கள் பண்பாடு

கொண்ட மையல் தீர்ப்பதுன் பாரமே - எaனக்
கூட்டிக்கொள் உன் இடுப்பின் ஓரமே
நொண்டியின் கைம்மேல் வந்தா விழும்? - என்
நோய் தீர்க்கும் சேலத்து மாம்பழம்

அழகில் ஆருமில்லை உன்னைப்போல் - உன்மேல்
அன்பு கொண்டவன் ஆருமில்லை என்னைப்போல்
இழைக்க இழைக்க கொடுக்கும் சந்தனம் - மனம்
இனிக்க இனிக்க பூப்பூக்கும் நந்தனம்
பழுக்கப் பழுக்கச் சுவை கொடுக்கும் செவ்வாழை
பறிக்கும்போதே மணம் கொடுக்கும் வெண்தாழை
தழுவு முன்னே இன்பந்தரும் பெண்ணாளே என்
சாவை நீக்க வேண்டுமடி கண்ணாளே.
------------
உன் எண்ணம் கூறு

பாழாப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி - அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி
ஏழைக்கு வடித்து வைத்த சோறு - பணம்
இருப்ப வர்க்குச் சாத்துக்குடிச் சாறு
பெருக் கெடுத்த தேனாறு
பெண்ணே உன் எண்ணம் கூறு
காணக்காண ஆசை காட்டும் முத்துநிலா -நீ
கடுகடுப்புக் காட்டுவதும் என் மட்டிலா
வேரிலே பழுத்த பலா
வேண்டும் போதும் தடங்கலா?
வீணாகிப் போகலாமா நேரமே - என்னை
விலக்கிவிட்டால் பழி உன்னைச் சேருமே
பொறுத்தோன் ஒரு வாரமே
பொறுக்க மாட்டார் யாருமே.
---------------------
குட்டி நிலாவும் வட்ட நிலாவூ<ம்

வட்ட நிலா
குட்டி நிலாவே குட்டி நிலாEவுறர> எங்கே வந்தாய் குட்டி நிலாEவுறர> குட்டி நிலா
வட்ட நிலாவே வட்ட நிலாEவுறர> வந்தேன் உன்னிடம் வட்ட நிலாEவுறர> கெட்ட உலகம் வாழும் வழியைக்
கேட்க வந்தேன் வட்ட நிலாEவுறர> வட்ட நிலா
எட்ட இருக்கும் வட்ட நிலா நான்
எனக்கா தெரியும் குட்டி நிலாவே?
குட்டி நிலா
வளர்ச்சி பெற்றாய் குளிர்ச்சி பெற்றாய்
வட்ட நிலாவே வாய் திற வாயோ?
வட்ட நிலா
தளர்ச்சி பெற்றது தட்டை யுலகம்
சண்டை பிடித்தது குட்டி நிலாEவுறர> குட்டி நிலா
களைப்பு நீங்க உலகம் ஒருவன்
கைக்குள் வருமோ வட்ட நிலாவே?
வட்ட நிலா
இருப்பு மிகவும் இருக்கும் ஊரில்
அரிசி உண்டோ குட்டி நிலாவே.
குட்டி நிலா
ஆயிரங் கோடிச் செலவின் வந்தேன்
அறிவைக் கொடுப்பாய் வட்ட நிலாEவுறர> வட்ட நிலா
ஆயிரங் கோடியை அரிசிக்காக
அளித்ததுண்டா குட்டி நிலாEவுறர> போய்விடு போய்விடு குட்டி நிலாEவுறர> போய்விடு என்றது வட்ட நிலாEவுறர> தீயில் எரிந்தது குட்டி நிலாEவுறர> தீய்ந்து விழுந்தது குட்டி நிலாவே.
----------------
தென்றல் செய்த குறும்பு

இழுத்திழுத்து மூடு கின்றேன்
எடுத்தெடுத்துப் போடு கின்றாய்
பழிக்க என்றன் மேலாடைத் தென்றலே - உன்னைப்
பார்த்து விட்டேன் இந்தச் சேதி ஒன்றிலே
சிலிர்க்கச் சிலிர்க்க வீசு கின்றாய்
செந்தாழை மணம் பூசு கின்றாய்
குலுக்கி நடக்கும் போதிலே என் பாவாடை - தலைக்
குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்தாய் தென்றலே
வந்து வந்து கன்னந் தொட்டாய்
வள்ளைக் காதில் முத்த மிட்டாய்
செந்தா மரைமுகத்தி ளைஏன் நாடினர் - ஏன்
சீவியதோர் குருங்கழலால் மூடினாய்
மேலுக்குமெல் குளிரைச் செய்தாய்
மிகமிகமிகக் களியைச் செய்தாய்
உள்ளுக்குள்ளே கையை வைத்தாய் தென்றலே
உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் - என் தென்றலே.
------------------
தோழியே சொல்வாய்

காசுபணம் வேண்டாமடி தோழியே - அவன்
கட்டழகு போதுமடி தோழியரே> ஆசை வைத்தேன் அவன்மேலே தோழியே -என்னை
அவனுக்கே அளித்தேனடி தோழியரே>
ஓசைபடா தென்வீட்டில் ஓர் இரவிலே - என்பால்
ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியரே> ஏசட்டுமே அவன் வரவால் என்னையே - நான்
இவ்வுலகுக்குக் கஞ்சேனடி தோழிEயூ

தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில் - செழுந்
தேனுக்காக வண்டுபாடும் மாலையில்
இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர் - நல்
எழில்காட்டிச் சென்றானடி தோழியரே>
ஒன்றெனக்குச் செய்திட்டி இப்போதே - நல்ல
ஒத்தாசை ஆகுமடி தோழியரே> அன்றெனக்குக் காட்சி தந்த கண்ணாளன் -கொஞ்சம்
அன்புதந்து போகச் சொல்வாய் தோழிEயூ

என்பார்வை அவன் பார்வை தோழியே - அங்கே
இடித்ததுவும் மின்னயதும் சொல்வாEயூ
தன் அழகில் தாக்கடைந்த என் வாழ்வில் - அவன்
தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாEயுறர>
பொன்னான நாளடியே என் தோழி - ஒருவாய்ப்
பொங்கலுண்டு போகும்படி சொல்வாEயுறர> இந்தாளும் வாழுகின்றேன் தோழியே - அவன்
எனை மறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியரே>
----------------------


கண்ணதாசன் இயற்றிய சினிமா பாடல்கள் - 1

, , , ...

Kavinjar Kannadasan (24 June 1927 - 17 October 1981) was a famous Tamil poet and lyricist, who lived in Tamil Nadu, India. He is frequently called kavi arasu Kannadasan (kavi arasu means 'king of poets' in Tamil language). He wrote thousands of popular songs for Tamil cinema. He won the Sahitya Akademi Translation Prize for his novel Cheraman Kadali in the year 1980.

His given name at birth was Muthiah. But when he made his exit from this world, at the age of 54, on October 16, 1981, millions of Tamils remembered him only by the name Kannadasan. For Tamils all over the world, he epitomised Tamil poetry. Even the illiterate, who couldn't read and memorise the poetry of Kamban or the maxims of Valluvan, could hum the compositions of poet Kannadasan.

A number count of his publications shows a tally of 109 volumes, which include 21 novels and 10 slim volumes of essays on Hinduism, captioned Arthamulla Indu Matham (Meaningful Hinduism). In addition, he produced about 4000 poems and approximately 5000 movie lyrics, between 1944 and 1981, all with an eighth grade education at the formal level. He was also an excellent example of this century's Tamil goliard.


1. அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
படம் - ஆயிரத்தில் ஒருவன்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் டி..எம். சௌந்தரராஜன் குழுவினர்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

குழு - அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமையென்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமையென்று சுடுவதில்லையே

குழு - சுடுவதில்லையே

காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

குழு --- ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே

குழு - பேசவில்லையே

வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுபாதை போகவில்லையே

குழு --- ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை

குழு --- ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
---------
2. அச்சம் என்பது மடமையடா
படம் - மன்னாதி மன்னன்
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் டி..எம். சௌந்தரராஜன்

அச்சம் என்பது .. மடமையடா..
அஞ்சாமை திராவிடர் .. உரிமையடா

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா

கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
ஆ...ஆ...ஆ.... ஆ...ஆ.........
கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பான் தமிழன்னை
ஆ...ஆ...ஆ....ஆ...ஆ.....
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களiன் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்க்கின்றார்

அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உரிமையடா
---------
3. அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
படம் -பட்டிக்காடா பட்டணமா இசை - எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர் - டி.எம். சௌந்தரராஜன்

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி

கல்யாண மேளங்கள் மணியோசை
என் கவலைக்கு தாளமடி
சொல்லாத எண்ணங்கள் பலகோடி
என் துன்பத்தின் தீபமடி
பெண்ணாக நான் நினைத்த மண் வீடு கரைந்து
தண்ணீரில் போனதடி
என் பட்டம் என் திட்டம் என் சட்டம்
அடி ராக்கம்மா காற்றாக பறந்ததடி
காற்றாக பறந்ததடி

எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்
அதில் ஒரு கட்டம் முடிந்ததடி
தாயார்க்குப் பின்னாலே சம்சாரம் - அது
தடம் கொஞ்சம் பிரண்டதடி
பண்பாடு காப்பதற்கு பெண் பார்த்து முடித்தேன்
என் பாடு மயங்குதடி
என் வீடும் என் வாழ்வும் ஒரு கோயில்
அடி ராக்கம்மா என் தெய்வம் சிரிக்குதடி

அடி என்னடி ராக்கம்மா என்னென்ன நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்க சிவப்பு
கண்ணீரில் நனையுதடி
----
4. அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
படம் - ஆண்டவன் கட்டளை இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா

டி.எம்.எஸ்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
தென்fனம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்.
ஓ ஓ ஓ
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

பி.எஸ்
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

டி.எம்.எஸ்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

இருவரும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
------------
5. அம்மா என்பது தமிழ் வார்த்தை
படம் - டீச்சரம்மா இசை - எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர் - பி. சுசீலா

அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

கவலையில் வருவதும் அம்மா அம்மா
கருணையில் வருவதும் அம்மா அம்மா
தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் தமிழ் வார்த்தை

பூ<மியின் பெயரும் அம்மா அம்மா
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
-------------
6. அண்ணன் காட்டிய வழியம்மா
படம் - படித்தால் மட்டும் போதுமா
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் - டி.எம்.சௌந்தரராஜன்

அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

தொட்டால் சுடுவது நெருப்பாகும்
தொடமால் சுடுவது சிரிப்பாகும்
தெரிந்தே கெடுப்பது உறவாகும்
தெரியாமல் கெடுப்பது பகையாகும்

அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அடைக்கலம் என்றே நினைத்திருந்தேன்
அணைத்தவனே நெஞ்சை எரித்து விட்டான்
கொடுத்தருள்வாய் என்று வேண்டி நின்றேன்
கும்பிட்ட கைகள் முறித்து விட்டான்
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா

அவனை நினைத்தே நானிருந்தேன்
அவன் தன்னை நினைத்தே வாழ்ந்திருந்தேன்
இன்னும் அவனை மறக்கவில்லை
அவன் இத்தனை செய்தும் நான் வெறுக்கவில்லை
அண்ணன் காட்டிய வழியம்மா
இது அன்பால் விளைந்த பழியம்மா
கண்ணை இமையே கெடுத்ததம்மா
என் கையே கழுத்தை நெரித்ததம்மா
அண்ணன் காட்டிய வழியம்மா
-----------

7. அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
படம் - பச்சை விளக்கு இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் - பி. சுசீலா

அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தா பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை

ஒரு பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
ஒரு பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மையில் எழுந்து நின்றாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மையில் எழுந்து நின்றாள்
பாரடி பாரடி பாவையின் ஆசையை ஓரடி ஈரடி நடக்கின்றாள்
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை

அந்தத் தங்க பதுமை உடல் பொங்கும் இளமை
அந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அந்தத் தங்க பதுமை உடல் பொங்கும் இளமை
அந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்
காதலன் காதலி நாடகம் ஆடிடும் நாளெனான்று போனது இளமையிலே
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
ஓ .... அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
----------
8. அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
படம் - பார் மகளே பார் இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி.பி. ஸ்ரீநிவாஸ்

டி.எம. எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி. எஸ்
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை

டி.எம்.எஸ்
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை

அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே

பி.பி.எஸ்
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே

டி.எம்.எஸ்
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்

இருவரும்
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்களiரெண்டைக் கவர்ந்து போனாளே
-------
9. அவளுக்கும் தமிழென்று பேர்
படம் - பஞ்சவர்ணக் கிளi இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - டி.எம.f சௌந்தரராஜன்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு நிலவென்று பேர்
வண்ண மலர் கொஞ்சும் குழலங்கம் முகிலுக்கு நேர்
அவளுக்கு குயிலென்று பேர்
அவள் குயில் கொண்ட குரல் கொண்டு கொண்டாடும் ஊர்
அவளுக்கு அன்பென்று பேர்
அவளுக்கு அன்பென்று பேர்
அந்த அன்பென்ற பொருள் நல்ல பெண்மைக்கு வேர்
பெண்மைக்கு வேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள் கவிதைக்கு மேல்
கவிதைக்கு மேல்
அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை உழுகின்ற ஏர்
உழுகின்ற ஏர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு உயிர் என்று பேர்
என்றும் அவள் எந்தன் வாழ்வெனும் வயலுக்கு நீர்
வயலுக்குநீர்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
------------------
10.அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
படம் - பஞ்சவர்ணக்கிளi இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் - பி. சுசீலா

சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்

மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
--------
11. ஆடி அடங்கும் வாழ்க்கையடா
படம் - நீர்க்குமிழி இசை - வி. குமார் பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
---------------
12. ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
படம் - பொன்னூஞ்சல்
இசை - எம்.எஸ். விஸ்வநாதன் பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா

டி.எம்.எஸ்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

பி.எஸ்.
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

ஓ ஓ....
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

டி.எம்.எஸ்
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

பி.எஸ்
கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள்

டி.எம்.எஸ்
பொன்மாலை அந்தியிலே என் மானை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்

இருவரும்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆ...ஆ
ஆ....ஆ
-----
13. ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
படம் - பாலும் பழமும் இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
---------
14. ஆறு மனமே ஆறு - அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
படம் -ஆண்டவன் கட்டளை
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் - டி.எம். சௌந்தரராஜன்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு...

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு....
---
15. ஆயிரம் பெண்மை மலரட்டுமே
படம் - வாழ்க்கைப்படகு
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்கள் - பி. சுசீலா குழுவினர்

ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

குழு
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமணம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்....

குழு
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்.....

மன்னவனே ஆனாலும் ... மண்ணளந்து கொடுத்தாலும்...
பெண் மனதை நீ அடைய முடியாது
வாள் முனையில் கேட்டாலும் வெஞ்சிறையில் போட்டாலும்
உடலன்றி உள்ளமுனைச் சேராது..ஆ...ஆ...ஆ
மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானம் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
------
16. இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
படம் - போலிஸ்காரன் மகள் / இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி / பாடியவர்கள் - பி பி ஸ்ரீனிவாஸ், எஸ் ஜானகி

எஸ். ஜா
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ ..ஓ...ஓ..ஓ
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

வண்ண மலர்களiல் அரும்பாவாள் உன் மனதுக்கு கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ..ஓ..ஓ...
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
அவள்விடிந்த பின் துயில்கின்றாள் என் வேதனை கூறாயோ ...ஓ...ஓ..

ஸ்ரீனிவாஸ்
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா..ஆ...ஆ
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்

தன் கண்ணனைத் தேடுகிறாள் மனக் காதலைக் கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என்று அதனையும் கூறாயோ...ஓ...ஓ..
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா..ஆ...ஆ
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
--------
17. இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்
படம் - சாந்தி நிலையம் பாடியவர் - பி சுசீலா குழுவினர்

பி எஸ்.
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

ஒன்றுகூடி
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை

ஒன்றுகூடி
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

ஒன்றுகூடி
பாசம் என்பது வீடு
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்

பி எஸ்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்கள் அவனைக் காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க

ஒன்றுகூடி
கைகள் அவனை வணங்க
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை - அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் - அவன்
என்றும் நல்வழி தருவான்
---------
18. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
படம் - கர்ணன்
இசை -விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்த
உன்னடி பணிவேனடா -கர்ணா
மன்னித்து அருள்வாயடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

செஞ்சோற்று கடன் தீர்த்த சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா - கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
வஞ்சகன் கண்ணனடா

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா .... கர்ணா
வருவதை எதிகொள்ளடா

---------------
19. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
படம் - திருவருட் செல்வர் இசை - கே வி மஹாதேவன் பாடியது = சீர்காழி கோவிந்த ராஜன்

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
அவன் கடவுளiன் பாதியடி ஞானத் தங்கமே .... ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு...
பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளi நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே
அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே
-------------
20. இயற்கை என்னும் இளைய கன்னி
படம் - சாந்தி நிலையம்
இசை - எம் எஸ் விஸ்வநாதன் பாடியவர்கள் - எஸ் பி பாலசுப்ரமணியம், பி சுசீலா

பி எஸ்
ஆஹுஹா......
எஸ் பி
ஓஓஹோ......
இருவரும்
ஆ ஆ ஆ.......

எஸ் பி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பி எஸ்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

எஸ் பி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பி எஸ்
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
எஸ் பி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டுவைத்த வண்ண முகம் நீராட
பி எஸ்
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கே தூது விட்டாள்
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

எஸ் பி
தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
பி எஸ்
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடைகள் மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்fடிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

எஸ் பி
மலையை தழுவிச் செல்லும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம்தானே
மஞ்சள் ஒன்று போடலாமே
பி எஸ்
தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம்தானே
அந்திப் பட்டுப் பேசலாமே
இருவரும்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
ஆஹுஹா....ஹுஹா.........
------

ஓ! மாவீரர்களே!

, ,

உண்ர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்...

ஓ! மாவீரர்களே!

Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31