Posts tagged with "Tips"
Thursday, 20. March 2008, 08:36:57
Chewingcum, Tips, tamil, Health
...
எதிக உடல் எடை கொண்டவரா நீங்கள், எடையை குறைக்க முடியாமல் தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம், சூயிங்கம் மென்றால் போதும் உடல்எடை குறைந்துவிடும் என்கிறது ஓர் ஆய்வு.
அமெரிக்காவிலுள்ள லிவர்பூல் பல்கலைக்கழக் ஆராய்ச்சியாளர்கள் 'விர்க்லே' சூயிங்கம் நிறுவனத்துடன் இணைந்து ஓர் ஆய்வு நடத்தினர்.
அதன்படி, ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 60 பேர் தொடர்ந்து நான்கு நாட்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களுக்கு தினமும் மதிய உணவும், மாலையில் பிஸ்கட் போன்ற நொறுக்குத்தீனிகளும் தரப்பட்டன.
நான்கு நாட்களுக்கு பின்னர், மதிய உணவுடன் சூயிங்கமும் தரப்பட்டது. சூயிங்கம் சாப்பிட்டவர்களால் மாலையில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமுடியவில்லை. இதனால், அடுத்த நான்கு நாட்களில் அவர்களது உடல்எடை குறைந்திருப்பது தெரியவந்தது.
இதன்மூலம், சூயிங்கம் சாப்பிடுவதால் பசி உணர்வு குறைகிறது என்றும், எனவே நொறுக்குத்தீனி பழக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து சூயிங்கம் சாப்பிட்டால் உடல் மெலிய வாய்ப்பு உண்டு என்றும் தெரியவந்துள்ளது.
தமிழ் குர்ஆன் இலவசம்
சவூதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள சங்கைமிக்க குர்ஆன் மற்றும் அதன் கருத்துக்களின் தமிழ் மொழிபெயர்ப்பை இலவசமாக உங்கள் கணிணியில் தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இந்தத் தளத்துக்கு செல்லுங்கள்
http://www.islamic-invitation.com/book_details.php?bID=301
Wednesday, 20. February 2008, 08:25:53
Idea, Tips, tamil, kitchen
...
காலிஃப்ளவர் மஞ்சூரியன்
சைவ உணவில் மஞ்சூரியன் செய்ய முடியாது என்று வருத்தப்பட்டவர்கள் இவ்வாறு சுவையாக உங்களுக்கு விருப்பமான எந்த காய்கறியில் வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம்.
என்ன தேவை?
காலி ஃப்ளவர் - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - தேவையான அளவு
பூண்டு - 10 பெரிய பற்கள் ( சின்னதாக நறுக்கிக் கொள்ளுங்கள் )
ஸோயா சாஸ் - ஒரு ஸ்பூன்
அஜினமோட்டோ - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4 + சில்லரி ஒரு தாள்
( சின்னதாக வெட்டி மிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்)
மிளகாய்த் தூள் பசை - ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
மக்காச்சோளம் - ஒரு கை
மைதா மாவு - ஒரு கை
முட்டை (அடித்தது) - 1
எப்படி செய்வது?
* காலிஃப்ளவரை முதலில் வேக வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் மக்காச்சோள மாவு, மைதா மாவு, முட்டை, உப்பு தடவி எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடம் பொரியுங்கள்.
* வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சியை வதக்குகங்கள்.
* சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு, பச்சை மிளகாய், சில்லரி, மிளகாய்ப் பசை போட்டு லேசாக வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடுங்கள்.
* இதில் சர்க்கரையும் கொஞ்சம் மக்காச்சோள மாவும் சேர்த்துக் கிளறுங்கள்.
* இதில் பொரித்தெடுத்த காலிஃப்ளவரை கொட்டுங்கள்.
* இரண்டு நிமிடம் வதக்கி எடுத்து சுடச்சுடப் பரிமாறுங்கள்.
தயிர் இட்லி
தயிர் வடையை விரும்பி சாப்பிடுபவர்கள் இனி தயிர் இட்லியையும் சாப்பிடலாம். இது போல வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் யாருக்குத் தான் பிடிக்காது.
என்ன தேவை?
இட்லி மாவு - 2 கப்
புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தழை - சிறிதளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - 3
பச்சை மிளகாய் - 4
முந்திரிப்பருப்பு - 6
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
எப்படி செய்வது?
* மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.
* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.
* அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.
* பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.
* இந்த இட்லிக்கு உப்பு காரம் தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.
Tuesday, 19. February 2008, 12:26:16
Tips, tamil, Food, Health
...
தேவையான பொருள்கள்:
ரவை - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு
சீரகம்
முந்திரிப் பருப்பு
தேங்காய்
இஞ்சி
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
உப்பு
பெருங்காயம்
எண்ணெய்
நெய்
செய்முறை:
ரவை, அரிசிமாவு, மைதா, கடலைமாவை உப்பு, பெருங்காயம், தயிர் சேர்த்து தேவையான தண்ணீரில், நீர்க்க கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். (வழக்கமாகச் சொல்வதுதான் - மாவுக் கலவையை அரை நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் சுலபமாகக் கலக்கலாம்.)
சிறிது நெய்யில் மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு துண்டுகள், பொடிப்பொடியாக நறுக்கிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை என்ற வரிசையில் சேர்த்து தாளிக்கவும்.
தாளித்த பொருள்களை மாவில் கலக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழையும் சேர்த்து அப்படியே ஒருமணிநேரம் வைத்திருக்கவும்.
தோசை வார்க்க ஆரம்பிக்கும் முன் மேலும் தேவையிருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். கலவை நீர்க்க இருத்தல் அவசியம்.
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, ஒருகரண்டியால் மாவை ஓரத்திலிருந்து சுற்றிவிட்டு, நடுவிலும் விட வேண்டும். (மாவை இழுத்து, காலி இடத்தை நிரப்பப் பார்ப்பது, வட்டவடிவமாக வார்க்க ஆசைப்படுவது எல்லாம் தேவை இல்லை.)
சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து நன்கு வெந்து அடிப்பாகம் மொறுமொறுப்பாகும்வரை காத்திருந்து திருப்பவும்.
அடுத்தப் பக்கமும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும்.
சுடச்சுட மட்டுமே பரிமாறவும். ஆறினால் கட்டைமாதிரி ஆகிவிடும்.
* நான்-ஸ்டிக்கை விட இரும்பு தோசைக்கல்லில் சுவையான மொறுமொறுப்பான தோசைகள் வரும். முதலிரண்டு தோசைகள் சரியாகவராமல் படுத்தலாம். [அவற்றை ‘மாமியார் தோசை’ என்பது குழூஉக்குறி.

] தொடர்ந்து சரியாக வரும்.
* என்னைப் பொருத்தவரை மாவு கரைத்ததுமேகூட வார்க்கலாம். சரியாக வரும்.
* முந்திரிப் பருப்பு, மிளகு, தேங்காய்த் துண்டுகள், எங்கேயோ கொஞ்சமாக வரும் நெய்வாசனை, இவையே ரவா தோசைக்கான அடிப்படை அலங்காரப் பொருள்கள். இவை நான்கின் கூட்டணிச் சுவைதான் ரவா தோசை என்ற அங்கீகாரத்தைத் தரும். (அதிகம் நெய்விடக் கூடாது. நெய், தோசையை மென்மையாக்கிவிடும்.)
* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, நடுவில் தூவினால் ஆனியன் ரவா.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, சாம்பார்…
(http://mykitchenpitch.wordpress.com/2008/02/18/ravaa-dosai/)
Monday, 18. February 2008, 11:38:03
Hair, Health, tamil, Tips
...
வியர்வை நாற்றத்தைப் போக்க எளிய வழி
கடுமையான வெயிலின் காரணாமாகவும், அயராது வேலை செய்ய வேண்டிய நிலையினாலும் பலருக்கும் வியர்வை ஏற்படுவது இயல்பு.
ஆனால், இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், அருகில் உள்ளவர்களை முகம் சுழிக்க வைக்கும் என்பதால், அத்தகைய நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.
இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.
இளநரையைத் தடுக்க எளிய வழி
இளம் வயதிலேயே கேசம் நரைத்துவிடுவது, பலருக்கும் மன ரீதியாகக் கூட இன்னலை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு, புதுப்புது ரசாயன மருந்துகளை நாடுவது இயல்பு. இது, சிலருக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
ஆனால், இயற்கை வைத்திய முறையில் முயற்சி செய்தால் தேவையற்ற எதிர் விளைவுகள் வராது என்பதால், அதை நாடுவது நல்லதே. இளநரையைப் போக்குவதற்கு எளிதான வழி இதோ...
தேவையானவை :
மருதாணி இலை அரைத்த விழுது - ஒரு கப்
ஒரு முழு எலுமிச்சைம்பழச்சாறு
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய 'நெல்லி முல்லி' பொடி - 2 தேக்கரண்டி
செய்ய வேண்டியவை :
மேற்குறிப்பிட்டவற்றை கால் கப் தயிரில் கலந்துகொள்ள வேண்டும்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.பின்னர், இந்தக் கலவையை காலையில் எழுந்து கேசத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும்.அதன்பின், சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காயவைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.
இவ்வாறு, வாரத்திற்கு ஒருநாள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் இளநரை நீங்கிவிடும்.
கண்களின் தளர்ச்சி நீங்க எளிய வழி[/ALIGN]
இரவு நேரப் பணிகளை மேற்கொள்பவர்களும், அதிக நேரம் கண் விழித்து இருப்பவர்களும் சில அவதிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது.
அத்தகையோருக்கு மிகுந்த இன்னலை ஏற்படுத்துவது, கண்களில் ஏற்படும் தளர்ச்சி. அவ்வாறு கண்களுக்குத் தளர்ச்சி ஏற்படின், அதை நீக்குவதற்கு எளிய வழி உண்டு.
இரண்டு வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு மேல் வைத்து, குறைந்தது பத்து நிமிடங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால், கண்களுக்கு ஏற்பட்ட தளர்ச்சி உடனடியாக நீங்கிவிடும்.
உறக்கத்துக்கு உறுதுணைபுரியும் ஆரஞ்சு:-இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஓர் எளிய குறிப்பு...
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு நூறு மில்லி ஆரஞ்சு பழச்சாறை எடுத்து, அதில் இரண்டு தேக்கரண்டி அளவில் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
இதேபோல் ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உறக்கம் வராமல் அவதியுறும் நிலை வராது என்கிறது இயற்கை வைத்தியம்.
இடக்கை பழக்கம் ஏற்பட காரணம் என்ன?நமது மூளை பெருமூளை, சிறுமூளை மற்றும் முகுளம் என மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. இதில் பெருமூளை இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது.
இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன.
இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
Monday, 18. February 2008, 11:14:59
Tips, memory, Health, tamil
வயோதிகர்களுக்கு மட்டுமின்றி, வயதில் இளையவரான பலருக்கும் நினைவாற்றல் போதுமானதாக இல்லாத நிலை ஏற்படுகிறது.
இதற்கு, உரிய உயிர்சத்துகள் (வைட்டமின்) குறைபாடே முதன்மையான காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை செய்வது மிக மிகச் சுலபம் என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நாம் தினமும் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு ஆகிய பழங்களை உட்கொண்டோமானால் நினைவாற்றல் பெருகுவதோடு, மூளையும் உரிய முறையில் பாதுகாக்கப்படுகிறது.
இதனை, நியூயார்க்கின் கார்னெல் பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் தங்களது ஆய்வு ஒன்றின் மூலம் நிரூப்பித்துள்ளனர்.
இந்த மூன்று கனிகளிலும் உள்ள வைட்டமின் சத்துகள், மினரல் சத்துகள் மற்றும் ஃபைபர் ஆகியவை, மூளைக்கு உறுதுணைபுரிவதாக அந்த ஆய்வு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறது.
எனவே, நம் அன்றாட உணவில் இம்முக்கனிகளைச் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வழிவகுப்போம்.
Wednesday, 13. February 2008, 08:24:56
intreview, communication, Tips, tamil
( தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )
நேர்முகத் தேர்வு குறித்த பயமும், தயக்கமும் படபடப்பும் பெரும்பாலானோரிடம் இருப்பது இயல்பே. சரியான திட்டமிடுதல் மூலம் இந்த தேவையற்ற பதட்டத்தை விலக்கி நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்.
நேர்முகத் தேர்வு என்பது குற்றவாளியிடம் வழக்குரைஞர் நடத்தும் விசாரணை அல்ல என்பதை முதலில் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் அந்தப் பணிக்குத் தகுதியான நபர் என்னும் எண்ணம் நிர்வாகத்துக்கு இருப்பதால் தான் தன்னை அழைத்திருக்கிறார்கள் என்னும் உயர்ந்த சிந்தனை முதலில் உள்ளத்தில் நிலைக்க வேண்டும்.
* முதலில் எந்த பணிக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்கிறோம் என்பதைக் குறித்த முழு அறிவு வேண்டும். அந்தப் பணிக்கு தான் தகுதியானவன் தானா, தனக்குப் பிடித்தமான பணிதானா என்பதில் ஒரு தெளிவு நிச்சயம் வேண்டும்.
* அந்தத் தெளிவு கிடைத்துவிட்டால் பின்னர் அந்தப் பணிக்கு என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதைக் குறித்து தகவல் திரட்ட வேண்டும். அந்த எதிர்பார்ப்புகளை ஈடுசெய்யக் கூடிய வகையில் தன்னிடம் தகவல்கள் இருக்கின்றனவா என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டும்.
* தன்னம்பிக்கை மிகவும் அவசியம். நேர்முகத் தேர்வில் அமரும்போது சிறு புன்னகையையும், தன்னம்பிக்கையையும் முகத்தில் தவழ விடுங்கள். வேட்டைக்காரனின் முன்னால் மண்டியிடும் பறவை போல் இருக்க வேண்டாம்.
* நேர்முகத் தேர்வுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்தல் அவசியம். குறிப்பாக எப்போது நேர்முகத் தேர்வு, எந்த இடத்தில், யாரைச் சந்திக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* மிகவும் முன்கூட்டியே நேர்முகத் தேர்வுக்குச் செல்ல வேண்டாம். பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகச் செல்லலாம். சென்ற உடனே நீங்கள் வந்த தகவலை தெரியப்படுத்திவிடுங்கள்.
* நேர்முகத் தேர்வுக்குச் சான்றிதழ்கள் கொண்டு செல்லவேண்டியிருந்தால் அதை முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்திருங்கள்.
* நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் நிர்வாகத்தைக் குறித்த சில தகவல்களை இணையம் போன்ற இடங்களிலோ, நண்பர்களிடமோ கேட்டு வைத்துக் கொள்வது நேர்முகத் தேர்வாளரை வசீகரிக்கும்.
* என்னென்ன கேள்விகள் கேட்க வாய்ப்பு இருக்கிறது என்பவற்றைக் குறித்து விழிப்பாய் இருங்கள். குறிப்பாக உங்கள் பயோடேட்டா சொல்லும் தகவல்கள் அனைத்திலும் ஆழமான அறிவு கொண்டிருங்கள்.
* நல்ல தூய்மையான ஆடை தன்னம்பிக்கையைத் தரும். மரியாதையையும் பெற்றுத் தரும். அதை மறக்க வேண்டாம். உணவு மட்டும் சுவையாய் இருந்தால் போதாது, பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
* கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். அதிகப்படியான பேச்சுகள் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டு மூன்று நிமிடங்களில் தெளிவாகப் பதில் அளியுங்கள்.
* கேள்விகளைக் கவனமாகக் கேளுங்கள். கேள்வி முடியும் முன்பு பதிலை துவங்க வேண்டாம். கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே இடைமறித்துப் பேசுதலும் வேண்டாம்.
* பழைய அலுவலகத்தைக் குறித்து எதிர் கருத்துக்கள் எதையும் சொல்ல வேண்டாம். உற்சாகத்துடன் பேசுங்கள். தன்னம்பிக்கையும் நேர் சிந்தனையும் உங்கள் பேச்சில் தொனிக்கட்டும்.
* ‘உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ எனும் கேள்வி எழுப்பப்பட்டால் தெளிவாக நீங்கள் எதையெல்லாம் உங்கள் பலம் என்று கருதுகிறீர்களோ அவற்றை முன்னிலைப்படுத்திப் பேசுங்கள். இது மிக மிக முக்கியம்.
* ஓரிரு பயோடாடாக்களையும், புகைப்படங்களையும் கையிலேயே வைத்திருங்கள்.
* கண்களில் பார்த்து தைரியமாகப் பேசுவது உங்கள் ஈடுபாட்டைக் காட்டும். எனவே அதையே பின்பற்றுங்கள்.
* உங்கள் பணிநாட்களில் செய்த குறிப்பிடும்படியான சாதனைகள். பெற்ற விருதுகள் இவற்றை தெரியப்படுத்துங்கள்.
* நேர்முகத் தேர்வு என்பது நீங்கள் அந்த வேலைக்குத் தகுதியானவரா என்று பார்ப்பது போலவே, உங்களுக்குத அது தகுதியான வேலை தானா அது என பார்க்கவும் தான். எனவே உங்களுக்குத் தரப்படும் நேரத்தில் உங்கள் கேள்விகளையும் கேளுங்கள்.
* உங்கள் பலவீனங்களை அறிந்து கொள்வது உங்களுடைய பலம், எனவே உங்கள் பலவீனங்களை அறிந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் செல்லும் வேலைக்கு அந்த பலவீனம் தடையாய் இருக்கும் என அறிந்தால் அதை தெரியப்படுத்தாமல் இருப்பது நலம்.
* நேர்முகத் தேர்வின் முடிவில் ‘நான் இந்த வேலைக்குத் தகுதியானவன் என்று தோன்றுகிறதா ?’ என கேளுங்கள். அது உங்களுக்குப் பலன் தரும். எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தால் வாதத்தில் ஈடுபடாமல் சுருக்கமாக பதிலளியுங்கள். உங்களிடம் இல்லாத திறமையை ஒத்துக் கொண்டு அதை விரைவில் பெறுவேன் என நம்பிக்கை தாருங்கள்.
* உங்கள் குணாதியங்கள் நல்லவை என உங்கள் நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துங்கள். தேவையற்ற எரிச்சல், கோபம், படபடப்பு போன்றவற்றை வெளிக்காட்ட வேண்டாம்.
* முந்தைய வேலையை ஏன் விட்டீர்கள் எனும் கேள்வி நிச்சயம் எழும், அப்படிப்பட்ட சூழலில் என்ன பதில் சொல்லவேண்டும் என்பதை மிகவும் எச்சரிக்கையுடன் தயாரித்து வையுங்கள். இருபுறமும் கூர்மையான வாளைக் கையாளும் கவனம் தேவை. பழைய நிர்வாகத்தைப் பழிக்காமல், புதிய நிர்வாகத்துக்கு திருப்தியும், நம்பிக்கையும் ஏற்படும் வகையில் உங்கள் பதில் அமைய வேண்டியது அவசியம்.
* பணிகளுக்கு இடையேயோ, அல்லது படிப்பிற்கும் வேலைக்கும் இடையே இடைவெளி இருந்தால் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டி வரலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
* உங்கள் பணி என்னவாய் இருக்கும் என்பதையும், அதன் முக்கியத்துவங்களையும் உங்களுக்குத்தரப்படும் நேரத்தில் கேளுங்கள்.
* உங்களுக்குத் தெரியாத தொழில்நுட்பத்தில் கேள்வி கேட்கப்பட்டால், அதே போன்ற வேறு தொழில்நுட்பங்கள் தெரிந்தால் அதைக் கூறி விரைவில் இந்த தொழில் நுட்பத்தை கற்றுக் கொள்ள முடியும் என நம்பிக்கையூட்டுங்கள்.
* நேர்முகத் தேர்வு என்பது உங்களை மதிப்பிடும் இடம். இந்த இடத்தில் நீங்கள் தவிர்க்க முடியாத நபர் எனும் தோற்றத்தை உருவாக்கினால் உங்களுக்கு நல்ல சம்பளமும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
* நேர்மையாகவும், உண்மையாகவும் பதிலளியுங்கள். வேலை என்பது லாட்டரி சீட்டல்ல ஒரு நீண்ட கால பந்தம் போல. தவறான தகவல்களை அளித்துவிட்டு பணியில் சேர்ந்தால் அது பிரச்சனைகளைச் சம்பாதித்துத் தரலாம்.
இவற்றைக் கவனத்தில் கொண்டால் நேர்முகத் தேர்வுகள் உங்களுக்கு தோழனாக மாறிவிடும். கவனமுடன் செயல்பட்டு வாழ்வில் உயருங்கள்.
Monday, 28. January 2008, 12:33:00
beauty, Tips, tamil, Health
பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மூலிகைகள் என இவற்றை கூறலாம். இளமையாக அழகhக பார்ப்போரை கவரும் தன்மையைக் கொடுக்கும் செயல்பாடுகள் அதிகம் கொண்ட மூலிகைகள். இந்த மூலிகைகளுக்கு எடுத்துக்காட்டாக நன்னாரிக் கொடியைச் சொல்லலாம்.
நன்னாரிக் கொடியின் nவர் :
நன்னாரிக் கொடியில் முக்கியமானது வேர். இதை சேகரித்து முறைப்படி சுத்தம் செய்து சூரணமாக மாற்ற வேண்டும். பின்னர் ஆவின் பாலோடு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும் . இதனால் தலைமுடி உதிர்வதை தடுக்கலாம். தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. இதனுடன் சீரகம் , மல்லி சக்கரை கலந்து சாப்பிட்டால் மேகச்சூடு, நீர்க்கடுப்பு, மேக வெட்டை, வறட்டு இருமல், கண் வளையம், தேமல், படை ஆகியவை விலகுகின்றன.
எட்டு விதமான செய்கைகளை கொண்ட எட்டு வித மூலிகைகள் முதலில் நோiய தம்பணப்படுத்தி பரவவிடாமல் வசியபடுத்தி, மாராண மூலிகைகள் அக்கிருமிகள் அழித்து, பேதண மூலிகைகள் பேதப்படுத்தி வித்துவேஷன் மூலிகைகள் அவற்றை உடலிருந்து வெளியேற்றுகின்றன.
இதன்படி பார்த்தால் முதல் இரண்டு வகை மூலிகைகள் கட்டாயம் இருக்க வேண்டும். தம்பனம், வசியம் மற்ற 6 வகைகளில் வைத்தியர் எதை சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து சேர்க்க வேண்டும். கடைசியில் கட்டாயம், மாரணம், வித்வேசனம் , பேதணம், இதில் ஏதாவது ஒரு மூலிகை இருக்க வேண்டும்.
எட்டுவித மூலிகைகளில் எதுவும் இல்லையெனில் மருந்தினால் பயன் இல்லை. இவ்வாறு அஷ்ட கர்ம முறைப்படி சேர்க்காததால் மருந்துகள் தோல்வியடைகின்றன என்பது ஒரு காரணம்.
இரண்டாவது காரணம் :
பத்தியம்
இந்திய வைத்தியத்தில் அன்று மருந்துடன் கட்டாயம் ஏதாவது ஒரு பத்தியம் வைத்தனர். பத்தியம் தான் நோயாளிக்கு முதல் மருந்து, இரண்டாவது தான் மூலிகைகள் பத்தியம் இல்லா விட்டால் மருந்துகளினால் பயன் இல்லை. இதனால் நல்ல மருந்துகள் கூட தோல்வியடைகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பக்க தலைவலி தலையில் நீரேற்றம், கண்களில் இருந்து சதா நீர் வருதல், தலைக்குத்தல், என்னும் நோய்களை 3 நாட்களில் பரிபூரண குணமடையச் செய்யலாம். முதல் நாள் காலை தலையில் பீனிச தைலம், அல்லது மிளகாய் தைலம் அல்லது சீரக தைலம் இதில் எதாவது 1 தைலத்தை வைத்து தலை முழுகி பின்பு கடுக்காய் 10 கிராம், 10 மிளகு, வைத்து கஷாயம் செய்து சாப்பிட , 1 அல்லது 2 தடவை பேதியாகம். இவ்வாறு 3 நாள் செய்தால் பரிபூரண குணமாகும். ஆனால் இதில் பத்தியம் முக்கியம். பகலில் தூங்க கூடாது. படித்தல், டி.வி. பார்த்தல், வெயிலில் உலாவுதல் கூடாது.
பச்சரிசி கஞ்சியும், பருப்பும் மட்டும்தான் உணவாக கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் 3 நாளில் குணப்படும். பத்தியம் இல்லாமல் 30 நாள் செய்தாலும் குணப்படுவதில்லை. காரணம் அன்று பத்தியயம். இன்று பத்தியமில்லை. பத்தியம் 3 நாட்கள் வரைதான் இருக்க வேண்டும் என்பது விதி. எனவே பத்தியம் இரண்டாவது காரணமாகின்றது.
3-வது காரணம் :
விதிகள் மாற்றப்படுகின்றன :
(1) சரக்கு சுத்திகள் :
சுக்கு, மிளகு, திப்பிலி முதல் வீரபாஷாணம், வரை எல்லா மூலிகைகளும், கடைச்சரக்குகளும் மூலத்தில் உள்ளபடி சத்தி செய்யப்பட வேண்டும் என்பது விதி.
“ சுத்தி என்பது அதிலுள்ள மருத்துவ குணங்களுக்கு எதிரான குணங்களை நீக்குவது” அன்றுபோல் எல்லா மருந்துகளும் சுத்தி செய்யப்பட்டு தயாரிக்கும் முறைகளை கையாளும் நிறுவனங்கள், மருத்துவர்கள் குறைவே”.
எல்லா மருந்துகளிலும் முக்கியமாக இடம் பெறும் மருந்துகள் ஆடாதொடை, தண்ணீர்விட்டான் கிழங்கு, கீந்திற்கொடி, கொடிசம்பாலைபட்டை, சோம்பு, அமுக்கிறா கிழங்கு, நன்னாரி வேர், நிலவேம்பு முதலியன . இவைகளை எப்போதும் பச்சையாக சேர்க்க வேண்டும். ஆனால் இன்று இவைகள் காய்ந்த சரக்குகளாகவே சேர்க்கப்படுகின்றது. இதனால் இவைகள் சேர்க்கப்பட்ட மருந்துகள் தோல்வியடைகின்றன.
இதே போல் வாய்விளங்கம் திப்பிலி, வெல்லம், தேன், கொத்தமல்லி ஆகியவைகள் 1 வருடத்திற்கு மேற்பட்டதாய் இருக்க வேண்டும். ஆனால் இன்று தேன் உடனடியாக சேர்க்கப்படுவதால் லேகிய முறைகள் யாவும் எதிர்பார்த்த அளவு வேலை செய்யாமல் தோல்வியடைகின்றன. இதே போல் மாசிக்காய், கடுக்காய் போன்ற துவர்ப்பு மூலிகைகளை, பதார்த்தங்களை இரும்பில் அறைக்கக் கூடாது என்பதும் விதி.
இப்படி மருந்து தயாரிப்பதிலே அன்றும் இன்றும் ஒப்பிட்டு பார்க்கையல் இவ்வளவு முரண்பாடுகள் உள்ளன. மேலும் இன்று நவீன வடிவில் தயாரிக்கப்படுவது மருந்துகளின் வீரியத்தை குறைக்கத்தான் செய்கிறது. அன்று எல்லா மருந்துகளுக்கு கவசம் போடப்பட்டதில்லை. அப்படியே சாப்பிடலாம். மருந்து நாக்கில் பட்டவுடனேயே உமிழ் நீரில் கலக்கும். எல்லா பாகங்களுக்கு சென்றடைந்து, வயிற்றை அடைந்து ரத்தத்தில் கலந்து வேலை செய்தது.
இன்று கேப்சூல் மூலம் தரப்படுவதால் உமிழ்நீரோடு கலப்பதில்லை. எனவே இதனாலும் மருந்தின் வீரியம் குறையலாம். இவை பொதுவான காரணங்கள். இவைகளை கண்டு இக்குறைகளை களைந்தால் நிச்சயமாக நோயை விரட்டலாம்
இனி பிறப்பு முதல் இறப்பு வரையிலான நோய்கள் வருவதற்கான காரணங்கள். அன்றும், இன்றும் இதற்குண்டான வைத்தியம் என்பதை பார்ப்போம்.
1 2 Next »
Showing posts 1 -
7 of 9.