Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "life"

20 Great Lines

, , , ...

1. Regular naps prevent old age… Especially if you take them while driving.

2. Having one child makes you a parent; having two makes you a referee.

3. Marriage is a relationship in which one person is always right and the other is the husband!

4. They said we should all pay our tax with a smile. I tried- but they wanted cash.

5. A child’s greatest period of growth is the month after you’ve purchased new school uniforms.

6. Don’t feel bad. A lot of people have no talent.

7. Don’t marry the person you want to live with, marry the one you cannot live without… But whatever you do, you’ll regret it later.

8. You can’t buy love. .. But you pay heavily for it.

9. True friends stab you in the front.

10. Forgiveness is giving up my right to hate you for hurting me.

11. Bad officials are elected by good citizens who do not vote.

12. Laziness is nothing more than the habit of resting before you get tired.

13. My wife and I always compromise. I admit I’m wrong and she agrees with me.

14. Those who can’t laugh at themselves leave the job to others.

15. Ladies first. Pretty ladies sooner.

16. It doesn’t matter how often a married man changes his job, he still ends up with the same boss.

17. They call our language the mother tongue because the father seldom gets to speak.

18. Saving is the best thing. Especially when your parents have done it for you.

19. Wise men talk because they have something to say; fools talk because they have to say something.

20. Real friends are the ones who survive transitions between address books

யார் மாற வேண்டும்?

, , ,

ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன. பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது. ஒருநாள் இரவு கடும் பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். "ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்"

"அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?"

"நகராமல் தான் இருக்கிறது"

"உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு. நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. 20 டிகிரி விலகிப் போகச் சொல்."

அப்படியே சிக்னல் அனுப்பப் பட்டது. அங்கிருந்து உடனடியாக மறுமொழி வந்தது. "நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது".

எரிச்சலடைந்த கேப்டன் சிக்னல் அனுப்பினார். "நான் கேப்டன் சொல்கிறேன். 20 டிகிரி விலகிப் போங்கள்"

மறுமொழி உடனடியாக வந்தது. "ஐயா நான் கப்பல்படையின் இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்"

கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படி கீழ்படியாமல் நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. "இது போர்ப்படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள்"

பதில் உடனடியாக வந்தது. "இது கலங்கரை விளக்கம்"

மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20 டிகிரி மாற்றிக் கொண்டன.

(இது அக்கப்பலில் பயணித்த கடற்படை வீரர் கடற்படையினரின் பத்திரிக்கையில் தெரிவித்து அதை ஸ்டீபன் கோவே தன் புத்தகம் ஒன்றில் மேற்கோள் காட்டியிருந்தார்).

ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையிலும் இப்படி சில கலங்கரை விளக்கங்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. நம் விருப்பப்படி மாறவோ, நமக்காக விலகி வழி விடவோ செய்யாத சில இருக்கத்தான் செய்கின்றன. மாற்றவே முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடி கட்டிய முட்டாள்தனமாகவே இருக்கும்.

இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது சிலருக்கு கௌரவக்குறைவாக தோன்றுவதுண்டு. மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கேப்டனுக்கு வந்த கோபம் போல "ஈகோ" பிரச்சினை எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன் மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.

ஒரு ஆங்கிலக் கவிஞன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். "கடவுளே! உலகில் மாற்ற முடிந்த விஷயங்களை மாற்றும் சக்தியையும், மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து தெளியும் ஞானத்தையும் எனக்குத் தருவாயாக!"

கடவுளிடம் நாம் வேண்டுவதும் அதுவாகவே இருக்கட்டும்.


(Source:- http://www.enganeshan.blogspot.com/)

வெற்றிக்கு ஏழு குறள்கள்.............

, , ,

எல்லா சுயமுன்னேற்ற நூல்களையும் சேர்த்து சாராம்சத்தை சுருக்கமாக அறிய முற்படுகிறீர்களா? உங்களுக்கு திருக்குறள் தான் ஒரே புகலிடம். கடுகைத் துளைதேழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்ற வர்ணனை திருக்குறளைப் பொருத்த வரை சிறிதும் மிகையல்ல.

எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். ஆன்மீகம் ஆகட்டும், லௌகீகம் ஆகட்டும், அறம் ஆகட்டும், தொழில் ஆகட்டும், அமைதி ஆகட்டும், மகிழ்ச்சி ஆகட்டும் குழப்பாமல் வழி காட்டும் அறிவுப் பொக்கிஷம் திருக்குறள் தான்.

நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பல நூல்கள் படிக்க நேரமும் பொறுமையும் இல்லையா? உங்களுக்கு திருக்குறள் உதவும். அதிலும் நீங்கள் எல்லாக் குறள்களையும் படிக்க வேண்டியதில்லை. ஏழே ஏழு குறள்களை நினைவில் நிறுத்தி பின்பற்றுங்கள் போதும்.


1) எண்ணத்தில் உறுதி:

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின். (666)

நினைத்ததை நினைத்தபடி அடைபவர் யார் தெரியுமா? தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். எண்ணத்தில் உறுதி இல்லா விட்டால் அது செயலில் முடியாது. செயலில் முடியாத எண்ணங்கள் விதைக்காத விதைகள். மாறாத உறுதியான எண்ணம் தான் எல்லா வெற்றிக்கும் ஆரம்ப விதி

2) Think positive

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)

எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.

3) விடாமுயற்சி

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்கு அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.

4) இந்த ஐந்தில் கவனம் தேவை

பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)

வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.

5) இந்த நான்கைத் தவிருங்கள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறார் திருவள்ளுவர். வெற்றியடைய வேண்டுபவர்கள் தோல்விக்கான வாகனத்தில் பயணம் செய்யலாமோ?

6) இவை இரண்டும் வழுக்குப்பாறைகள்

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (854)

ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், யாருக்கும் எளியவன். வெற்றியின் உயரத்திற்குச் செல்பவர்கள் இந்த இரண்டு வழுக்குப் பாறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இல்லா விட்டால் இது வரை சாதித்தது எல்லாம் வீணாய்ப் போகும்.

7) இந்தப் பேருண்மையை மறக்காதீர்கள்

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)

பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது.

இந்த ஏழு குறள்களில் முதல் நான்கு வெற்றிக்கு வழி சொல்கின்றன. அடுத்த இரண்டும் தோல்வி தரக் கூடியவற்றில் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றன. கடைசி குறள் வெற்றியின் நிறைவு நமக்கு என்றென்றைக்கும் நிலைக்க வேண்டுமானால் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது

பின்பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


(Source:- http://www.enganeshan.blogspot.com/)

சாவை வெல்லும் சூத்திரம்.....

, , ,

சக்தி(E) = நிறை(m)x (பொருளொளியின் வேகம்-c)²

சாதாரணப் பொருளில் ஒளிந்திருக்கும் அசாதாரண சக்தியை சூத்திரத்தில் காட்டினார் ஐன்ஸ்டீன்.

உயிர் = உடம்பு x (அருளொளியின் வேகம்)²

அருளொளியின் சொல்லொணா வேகத்தால், புலப்படும் உடம்பைப் புலப்படா உயிரில் ஒளித்து, சாவை வெல்லும் சூத்திரமானார் வள்ளலார்.

அருளைப் பற்றி அவ்வொளியால் உருக்கப்
பொருளாம் மெய்யும் ஒளியும்

(Source:- http://mahaayogaabyiam.blogspot.com/2008/02/blog-post_12.html)

மரணமிலாப் பெருவாழ்வு........

, , , ...

உடம்பு, மனம், மூச்சு இவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டமே, இவற்றின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.

கடவுள் என்று சொல்லப்படுகின்ற அருவமான ஒரே மெய்ப்பொருளிலிருந்தே பல்வேறு உருவத் தொகுதிகளான அனைத்தும் உருவாகின்றன. இந்த அருவ மெய்ப்பொருளானது அருட்தந்தை, அருட்தாய், அருட்குரு இம்மூவரும் ஒன்றிய பேரிருப்பாய் இருக்கிறது. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன்னுள் அனுமதிக்கும் சுத்த வெளியே அருட்தந்தை. எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அருளொளியால் அரவணைக்கும் ஜோதி வெளியே அருட்தாய். எல்லாவற்றையும் எந்தவொரு நிபந்தனையுமின்றித் தன் அறிவொளியால் ஒளிர்விக்கும் ஞான வெளியே அருட்குரு.

சுத்த வெளியின் தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால், ஜோதி வெளி சுத்த வெளியெங்கும் உருவாகிறது. இந்த ஜோதி வெளியானது, சுத்த வெளியின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் பேரொளிக் கோளமாக அதிவேகமாக விரிந்து கொண்டே இருக்கிறது. இந்த அதிவேகமான விரிதலுக்கும், சுத்த வெளியின் அழுத்தத்திற்கும் இடையே இடைவிடாது நிகழ்ந்து கொண்டே இருக்கும் புணர்தலால், சுத்த வெளியெங்கும் ஜோதிவெளியெங்கும் உருவாவதே ஞான வெளி. இஞ்ஞான வெளியானது, அருட்தாயின் அருட்தந்தையின் தலைமகனாகத் தலைமகளாகத் தன்னை அறிகிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்கவே முடியாது பின்னிப் பிணைந்திருக்கும் இம்மூவரின் ஒருமையே, கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருள்.

உடம்பு, மனம், மூச்சு இவற்றின் ஒருமையாம் ஓர் உருவத் தொகுதியாய் ஜீவிக்கும் நீ, கடவுள் எனப்படும் அருவ மெய்ப்பொருளின் ஓர் உன்னத தெய்வீக வடிவமே. அருட்தாயே உன் உடம்பாகவும், அருட்குருவே உன் மனமாகவும், அருட்தந்தையே உன் மூச்சாகவும், இம்மூவரும் ஒன்றிய பேரிருப்பே உருவத் தொகுதியான உன் ஜீவனாகவும் விளங்குகின்றனர். அருவமாய் விளங்கும் இவர்கள், தத்தம் உச்ச அதிர்வுகளைக் குறைத்துக் கொண்டே நீயாகவும், மற்றெல்லா உயிரினங்களாகவும், பொருட்களாகவும் உருவாகின்றனர்.

இப்பேருண்மையை எந்தவொரு ஐயமுமின்றி முழுமையாக நீ உணரும்போது, உடம்பு, மனம், மூச்சு இவற்றைப் பற்றிய தவறான கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு, இக்கண்ணோட்டம் விளைவிக்கும் இவற்றின் அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் மீண்டு, மரணமிலாப் பெருவாழ்வில் நிலைபெறுவாய்.

(Source:- http://magaayogam.wordpress.com/2008/04/03)

அதிசயக்கட்டளைகள் அய்ந்து......

, , ,

‘சொந்தக் காலில் நிற்பது முக்கியமில்லை. நின்ற இடத்தில் நிலைப்பதுதான் முக்கியம்’ என்பார்கள். எந்த ஆபீஸில் வேலை செய்தாலும் அதில் நிரந்தரமாக நிலைத்து நிற்க வேண்டும். அதற்கு 5 எளிய வழிகள்.

1.நீங்கள் என்னதான் நல்லவராகவும், நாணயமானவராகவும் இருந்தாலும் திறமை இல்லாவிட்டால் மதிப்பு இருக்காது. எனவே, ஒவ்வொரு மாதமும் உங்கள் திறமையில் ஒரு சதவீதத்தையாவது கூட்டிக் கொள்ளுங்கள்.

2.ஆபீஸில் பலம்பொருந்தியவர் யார் எனக் கண்டறியுங்கள். அவர்கள் சொல்லும் வேலைகளை விரைந்து முடியுங்கள். அவர்கள் விரும்பும் விதத்தில், எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்து முடிப்பவர் என்ற இமேஜை எல்லோரிடமும் வளர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான நேரங்களில் இது கை கொடுக்கும்.

3.ஆபீஸ் என்றால் கோஷ்டி அரசியல் இல்லாமல் இருக்காது. நீங்கள் எந்த கோஷ்டியிலும் உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளாதீர்கள். முடிந்தால், அந்த கோஷ்டிகளை இணைக்கும் பாலமாகச் செயல்படுங்கள். இது அதிக பலன்களைக் கொடுக்கும்.

4.உங்களைப் பற்றி நீங்களே உயர்த்திச் சொல்லாமல் இருந்தால் வேறு யார்தான் சொல்வார்கள். சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் மேலதிகாரிகளிடம் நீங்கள் சமீபத்தில் அலுவலகத்துக்காக செய்து முடித்த சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள்.

5.உங்கள் தரப்பு வாதங்களை எப்போதும் உரிய ஆதாரங்களுடன் ஆணித்தரமாக எடுத்துச் சொல்லுங்கள். வழவழ டைப் ஆட்களைப் போல் பேசாதீர்கள்.
Download Opera, the fastest and most secure browser
November 2009
S M T W T F S
October 2009December 2009
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30