Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

நவக்ரஹ ஸ்லோகங்களும், நவக்ரஹ காயத்ரீ மந்திரங்களும்...

, , ,

1.சூரியன் (SUN) 2.சந்திரன் (MOON) 3.செவ்வாய் (MARS)


4.புதன் (MERCURY) 5.குரு (JUPITOR) 6. சுக்கிரன் (VENUS)


7. சனீஸ்வரன் (SATURN) 8. ராகு (RAGU) 9. கேது (KETHU)


1. சூரியன்


சூரியன் துதிப்பாடல்:

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி,

சூரியா போற்றி, சுதந்திரா போற்றி

வீரியா போற்றி. வினைகள் களைவாய்.

உலகைக் காக்கும் ஒளித் தேவே

உயரிய ஆதவன் பகவன் நீ

இலகும் கிரக முதன்மை யனே

எனது துன்பம் களைந்திடுவாய்.

ஓம். அம் ஆதித்யாய நம:


சூரிய பகவான் காயத்ரீ:

ரோகிணி தேவி நற்கணவா

உலகில் அமிர்த உடல் கொண்ட

தேகி அமிர்த உண வருந்தும்

சுதந்திரா எந்தன் துயர் தீர்ப்பாய்.

ஓம். சம். சோமாய நம.


2. சந்திரன்


சந்திரன் துதிப்பாடல்:

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி, திருவருள் தருவாய்

சந்திரா போற்றி, சத்குரு போற்றி

சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி.


சந்திர பகவான் காயத்ரீ:

பத்ம த்வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீ மஹி

தநதஸ் ஸோம: ப்ரசோதயாத்.


3. செவ்வாய்


செவ்வாய் (அங்காரகன்) துதிப்பாடல்:

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே

குறையிலா தருள்வாய் குணமுடன் வாழ

மங்களச் செவ்வாய் மலரடி போற்றி

அங்காரகனே அவதிகள் நீக்கு.

பூவுலகின் புதல்வருமாய் மின்னல் போன்று

பொலிவுமிக்க ஒளியதுவும் உடையோனான்

தேவனே அங்காரக! வேல் கரமேந்தி

திகழும் திருவடிகள் சரணம் செய்தேன்.

மண்ணின் மைந்தா அங் காரகனே

மழையை தருபவன் தடுப்பவன் நீ

திண்ணிய தோளா உலகை அச்சுறுத்தும்

தேவா எந்தன் துயர் தீர்ப்பாய்.

ஓம். கும். அங்கரகாய நம:


செவ்வாய் காயத்ரீ:

வீர த்வாஜ.ய வித்மஹே

விக்த ஹஸ்தாய தீமஹி

தந்தோ பெளம: ப்ரசோதயாத்.


4. புதன்


புதன் துதிப்பாடல்:

இதமுற வாழ இன்னல்கள் நீக்கும்

புத பகவானே பொன்னடி போற்றி.

பந்தந் தாள்வாய் பண்ணொலியானே

உதவியே யருளும் உத்தமா போற்றி.

ஒளிமிகுந்த பேரறிஞ புதனே போற்றி

உலகினுக்கு ஆபத்து உற்பத்தி செய்வோய்

ஒளிமிகுந்த சந்திரனின் திருச்சுதனு மாகி

கதிரவனின் உறுதோளா துயரம் தீர்ப்பாய்.

ஓம். பும். புதாய நம.


புத பகவான் காயத்ரீ:

கஜ த்வாஜய வித்மஹே

கஜ ஹஸ்தாய தீமஹி

தந்தோ புத: ப்ரசோதயாத்.


5. குரு


குரு ஸ்லோகம்:

குருர் பிரம்மா குருர் விஷணுர்

குரு தேவோ மஹேஸ்வரஹ

குரு- சாட்சாத் பரப் பிரம்மா

தஸ்மை ஜ குருவே நமஹ

குரவே ஸர்வ லோகா நாம்

பீஷஜே பவ ரோகிணாம்

நிதயே ஸர்வவித்யா நாம்

தட்சிணா மூர்த்தியே நமஹா.


குரு துதிப்பாடல்:

மறைமிகு கலைநூல் வல்லோன்

வானவர்க்காசான் மந்திரி

நறைசொறி கற்பகப் பொன்

நாட்டினுக்கதில னாகி

நிறை தனம் சிவிகை மண்ணில்

நீகு போகத்தை நல்கும்

இறையருள் குரு வியாழன்

இருமலர்ப்பாதம் போற்றி.

அமரர் அமைச்ச அகல் விழியோய்

ஆரிய குருவே நலம் தருவோய்

தமரென சீடர் புடை சூழும்

தகவுடை குருவே துயர் தீர்ப்பாய்.

ஓம். குங்.குருதேவாய நம:


குரு பகவான் காயத்ரீ:

விருஷ ர த்வஜாய வித்மஹே

க்ருணி ஸஸ்தாய தீமஹி

தந்தோ குரு: ப்ரசோயாத்.


6. சுக்கிரன்


சுக்கிரன் துதிப்பாடல்:

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்

வக்கிரமின்றி வரமிகத் தருவாய்

வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே.

அசுரர் அமைச்சன் ஆசான் ஆனவரும்

அரிய உயிர்தரும் ஆற்றல் உடையவரும்

விசும்பில் திகழ் விண்மீன் திலகமதாய்

விளங்கு சுக்கிரன் வினை தீர்த்திடுக.

ஓம். சும். சுக்ரதேவாய நம:


சுக்கிர பகவான் காயத்ரீ:

அச்வ த்வஜாய வித்மஹே

ததூர் ஹஸ்தாய தீமஹி

தந்த : சுக்ர: ப்ரசோதயாத்.


7. சனீஸ்வரன்


சனீஸ்வரன் துதிப்பாடல்:

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

சச்சரவின்றிச் சாகா நெற்றியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா.

கதிரிநின் சேயே சனைச் சரனே

கண்கள் அகன்று நெடுஉடலுடையாய்

துதிசிவன் நேயா துவழ் நடையாய்

துயரம் தீரப்பாய் சனைச் சரனே.

ஓம். சங். சனி தேவாய நம.


சனி பகவான் காயத்ரீ:

காக த்வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்தோ மத்த: ப்ரசோதயாத்.


8. ராகு


ராகு துதிப்பாடல்:

அரவெனம் ராகு அய்யனே போற்றி

கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி

ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி

ராகுக்கனியே ரம்மியர் போற்றி.

உயர்ந்த சிரகம் நெடுபல்லும்

ஒப்பில் வலுவும் மேல்முடியும்

தயந்தரு உடவே இன்றி லகும்

ராகுவே என்துயர் தீர்த்திடுக.

ஓம். ரம். ராகுதேவாய நம.


ராகு பகவான் காயத்ரீ:

நக த்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்தோ ராஹு: ப்ரசோயாத்

9. கேது


கேது துதிப் பாடல்கள்:

கேதுத் தேவே கீர்த்தித் திருவே

பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்

வாதம், வம்பு வழக்கு களின்றி

கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.

பல்வேறு உருவங்கள் ஒருங்கிணைந்து

பலப்பல நிறங்களோடு தோன்றி நின்று

அல்லல்களை ஆயிரமாய் பெருக்கி வைக்கும்

ஆற்றலனே கேதுவென் துயரம் தீர்ப்பாய்.

ஒம்.உம். கேது தேவாய நம.


கேது பகவான் காயத்ரீ:

அச்வ த்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்த கேது: ப்ரசோதயாத்

கண்ணதாசனின் உண்மையை உணர்த்தும் தத்துவ பாடல்கள்...........எனது கவிதை கிறுக்கல்கள் !

Comments

Rajeshsrinivasan 18. September 2009, 06:33

I could not save this page.. How to store ?

muralikrishnanrb 23. October 2009, 03:07

you couldn't store if you have copy them and store it in your email or take print out....

Write a comment

You must be logged in to write a comment. If you're not a registered member, please sign up.

Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31